50
அப்பாத்துரையம் - 9
Worthilake) அவருடைய இரண்டு புதல்வியர்களும் கடலில் மூழ்கிய துயரக் கதையை விரித்துரைத்தது. மற்றொன்று கடலோடி களின் பாட்டு. அது கருந்தாடி என்றழைக்கப்பட்ட கடற் கொள்ளைக்காரன் டீச் (Teech the pirate (or Black-Beard) பிடிபட்டதைப் பற்றியது. அவை மிக மோசமான பாடல்களே. கூலி எழுத்தாளர்களின் போலி நாட்டுப் பாடல் நடை (Grub-Street ballad style) யிலேயே அவை அமைந்திருந்தன. அவற்றை அச்சிட்டபின், நகரத்தில் நானே கொண்டு விற்கும்படி என் தமையனார் என்னை அனுப்பினார்.
முதலது நன்றாக விற்றது; ஏனென்றால், அதன் நிகழ்ச்சி நடந்து நாளாகாததால், நிகழ்ச்சியின் சந்தடியில் பாடலும் விற்றது. இது என் தற்பெருமைக்கு நீர் வார்த்தது போலாயிற்று ஆனால், என் தந்தையார் என்னைத் தக்கபடி இடித்துரைத்தார். என் பாடல்களை அவர் நையாண்டி செய்ததுடன், பாடல் எழுதுபவர்கள் எப்போதும் இரவலர்களாகத் தான் இருக்க வேண்டியவர்கள் என்றும் அறிவுறுத்தினார். இவ்வறிவுரையால் கவிஞனாகாமல் பெரும்பாலும் மோசமான கவிஞன் என்ற பெயரே வந்திருக்கலாம், அப்படி வாராமல் தப்பினேன். ஆயினும் உரைநடை பற்றிய மட்டில், அது என் வாழ்வில் எனக்கு மிகவும் பயனுடையதாகவே இருந்தது. என் வாழ்க்கை உயர்வுக்கே அது மிகவும் முக்கிய காரணமாயிருந்தது என்றுகூடக் கூறலாம். எனவே, அந்தச் சூழ்நிலையில் இருந்தபடி இன்று அத்துறையில் எனக்குக் கொஞ்சநஞ்சம் உள்ள திறமையை நான் எவ்வாறு பெற்றேன் என்பதை உனக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.
14. சொற்போர்ப் பழக்கம்
நகரில் என்னைப்போலவே புத்தக ஆர்வலனான இன்னொரு சிறுவன் இருந்தான். அவன் பெயர் ஜான் காலின்ஸ் என்பது. அவனுடன் நான் மிகவும் நெருக்கமாகப் பழகினேன். நாங்கள் அடிக்கடி வாதாடுவோம். வாதாடுவதிலும், ஒருவரை ஒருவர் வாதத்தில் வென்று வீழ்த்துவதிலும், எங்களுக்கு மிகவும் விருப்பம். இத்தகைய வாத எதிர்வாதப் பழக்கம் வளர்வது நல்லதன்று; ஏனென்றால் அது மிகக் கெட்ட வழக்கமாகிவிடும். மக்கள் கூடியிருக்கும் இடத்தில் எதையும் எதிர்த்துரைக்கும் வழக்கம் அதன் பயிற்சிக்கு அவசியமாகிறது. ஆனால் அதே வழக்கம்