பக்கம்:அமர வேதனை.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

எழுதினார். அவை அடங்கிய தொகுப்புதான் 'அமர வேதனை'அன்று சந்திரனின் தேய்வைப் பார்த்து வேதனைப்பட்ட உள்ளம் தான் இன்றும்,

உண்மைக்காக
உரிமைக்காக
மனிதருக்காக
செத்த சாக்ரட்டீஸ்,லிங்கன்,
புத்தன் வகையறா...
அத்தனை பேரின் ஆன்மாவும்
அமைதியற்றுத் தவிக்கும்
என்றும் என்றும்!

என்று அமரவேதனைப்படுகிறது. கவிஞனின் உலகப் பார்வையும் தத்துவநோக்கும் அவனுடையது. வல்லிக்கண்ணன் மனப் புழுக்க படைப்பாளி. இன்றய மானிட வாழ்க்கையின் அவல நிலையைக் கண்டு வெதும்பிய உள்ளம். அவர் கவிதைகள் பெரும்பாலும் 'அநுபவப் புயல், கசப்புப் புழுதியை என்னுள் ரொப்பிவிட்டது' என்ற விதமாகவே பேசும். ஆனாலும் இந்த வறட்சி தொனிக்கு இடையேயும் 'உன் கண்கள்' போன்ற ஒயஸிஸ் உணர்வு கவிதைகளும் உண்டு. எளிய, சாதாரண வார்த்தைகளால் ஆன, நேரடியாகப் பேசும் கவிதை நடை அவருடையது. ஆழ்ந்த, தீர்க்கமான கருத்துக்களை கொண்டது. இவை எப்போதோ வெளியாகி இருக்கவேண்டியவை. இப்போதாவது வெளிவர, அதுவும் நான் வெளியிட வாய்ப்பு கிடைத்தது எனக்கு ரொம்ப திருப்தி.

சென்னை-5
24-4-1974 சி.சு.செல்லப்பா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/8&oldid=1278935" இலிருந்து மீள்விக்கப்பட்டது