பக்கம்:அமல நாதன்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16 அமலநாதன்

நிறுத்திக்கொண்டான். இதனால் இருவரும் வெளியேறுவது நின்றுவிட்டது.

அமலநாதன் அவ்வகத்தில் தங்கத்தங்கத் தன் சிற்றப்பனின் குணத்தை மேலும் மேலும் அறிய வழி ஏற்பட்டது. தன் சிற்றப்பன் பேச்சிலிருந்து அவன் மீது விருப்புக்கொள்வது விடுத்து வெறுப்புக்கொள்ளலானன். அவன்பால் அச்சமும் குடிகொள்ளலாயிற்று. வீட்டில் வேறு வேலை ஒன்றும் இல்லாமையால் பேச்சுக்களே நடந்து வந்தன. அமலநாதன் தன் தந்தையாரும் சிற்றப்பனும் இரட்டைப் பிள்ளையாகப் பிறந்தவர்களோ என்று வினவினன். அந்த வின கிழவனைச் சிறிது பிரமிக்கச் செய்தது. கோபமும் வரச் செய்தது. ஆனல் கோபத்தை வெளிக்குக் காட்டாமல் அடக்கிக் கொண்டனன். அவ்விளைஞன் விடுத்த வினவிற்கு விடையும் கொடுத்திலன். ஆனல் சிறுவன் பேசாமல் இல்லை. உங்கள் இருவரில் என் தந்தையார் முதியவரோ ? என்று வினவினன். அத்துடன் நிற்காது, ' என் தந்தையார் கம் இளைய சகோதரனுல் சொத்து சுதந்திரங்களில் மோசம் செய்யப்பட் டாரோ, என்றும் கேட்டனன்.

அவ்வாறு சிறுவன் கேள்விமேல் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்ததும், இனியும் நான் சும்மா இருத் தல் கூடாது என்று தன் வெறுப்புக் குறியை முகத்தில் காட்டாது விருப்புக் குறியைக் காட்டித் தான் ஒரு சிறு தொகையைக் கொடுப்பதாகத் தன் அண்ண அணுக்கு வாக்களித்ததையும் கூறினன். அதனால் சட்ட விதிப்படி தனக்குச் சொத்து சேர வேண்டுமென

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/21&oldid=1228766" இலிருந்து மீள்விக்கப்பட்டது