சிற்றப்பன் சந்திப்பு
அமலநாதன் கேட்க வேண்டிய நியதி இல்லை என்றும் குறித்தான். இவ்வாறு கான் சேமித்து வைத்த தொகை 600 ரூபாய் என்றும் குறிப்பிட்டான்.
இவ்வாறு தனக்கு 600 ரூபாய் சேமித்து வைத்துக் கொடுக்க எண்ணி இருப்பதாகக் கூறக்கேட்ட அமநாதன் அதனால் மகிழ்ச்சி ஒன்றும் கொண்டிருந்தான்.தன் சிற்றப்பன் ஆதிமுதல் அந்தம்வரை பொய் புகலுகிருன் என்று உணர்ந்துகொண்டான். என்றலும், சிற்றப்பன் ஒருபையில் இட்டு அளித்த தொகையை வெகு அமைதியாகப் பெற்றுக்கொண்டு நன்றி. செலுத்தினான்
பிறகு வன்கண்ணன் தன் அண்ணன் மகனை. அமலநாதனப் பார்த்து நீ மேலே சென்று, அறையில் உள்ள பெட்டியைக் கொண்டுவா. அதில் பல பத்திரங்களும் கடிதங்களும் உள்ளன. அவை உனக்குப் பயன்படக்கூடிய கடிதங்களாகும் என்று கட்டளையிட்டனன். வீடு இருள் அடைந்த வீடு என்பது முன்பே கூறப்பட்டது.
இங்கிலேயில் மேலே சென்று பெட்டியைக் கொணர வேண்டுமானல் விளக்கின் உதவி பெரிதும் தேவையாக இருந்தது. ஆகவே, தான் மேலே சென்று பெட்டியைக் கொணர விளக்கு ஒன்றைத் தருமாறு தன் சிற்றப்பனே வேண்டினன். இவன் வேண்டிய வாது விளக்கு அளிக்கப்படவில்லை. ஆனால், மேலே செல்வதற்கு வழி வகைகள் மட்டும் இன்ன என்பன கூறப்பட்டன. அந்தக்குறியின் வழியே அமலநாதன் மாழயைமாடி மேலே செல்லப் புறப்பட்டான்.