பக்கம்:அமல நாதன்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 அமல நாதன்

அமலநாதன் வங்கநாதனே முற்றிலும் நம்பிவிட்டான். கரைப்பவர் கரைத்தால் கல்லும் கரையும் அன்ருே?

வங்கநாதன் துறைமுகத்தை அடைந்தான். அங்கு. வன்கண்ணன் அகப்படவில்லை. சிறுவன் கப்பலின் மேல் தட்டில் கொண்டுபோகப்பட்டான். இங்கும் அங்கும் கப்பல் தட்டில் சுற்றிப்பார்த்து, பயங்கரக் குரலில் "ஐயோ என்னேக் காப்பாற்றுங்கள் என்னேக் காப்பாற்றுங்கள் பேர்ஆபத்து; பேர்ஆபத்து'என்று கூக்குரல் இட்டு அலறினன் அமலாகன். அதன் பய ஒக ஒரு மாலுமி ஓடிவந்து அவன் கலைமீது ஓங்கி ஒர் அடிகொடுத்தான். அவ்வளவுதான் சிறுவன் அவ்வடி பட்டு அப்படியே மெய்மறந்து கீழே விழுந்து விட் டான்.அமலநாதனுக்குத் தான் எவ்வளவுநேரம்தன்னே மறந்திருந்தான் என்பதுகூடத் தெரியாது. அவனுக் குத் தன் மயக்கம் தெளிந்து தன் சுய அறிவு தோன் றிய நிலையில் கன்னேக் கவனித்தபோது தன்கை, கால் கள் தளை செய்யப்பட்டுக் கப்பலில் எலிகளின் தொக் தரவு நிறைந்த ஓர் இருண்ட மூலையில் அடைக்கப்பட் டிருப்பதை உணர்ந்தான். அவனே ஒருபுறம் முன்நாள் வாங்கிய தலை அடி துன்புறுத்தியது; மற்றொரு புறம், இனி கம் வாழ்வு கடலில் இந்தக் கொடிய கப்பல் ஒட்டிகள் கையில்தான் கழியவேண்டும் போலும் என் அனும் அச்சமும், அவனே அவலககடலில் ஆழ்த்தியது. மாரியப்பன் பட்ட கஷ்டங்களையும் படும் கஷ்டங்களை யும் கினைத்து நினைத்து அமலநாதன் தீயில் விழுந்த புழுப்போல் துன்புற்றன். துன்புற்று யாது பயன் : விதி யாரை விட்டது? எண்ணமும் ஏக்கமும் சிறுவுனே வருத்துவதோடு நில்லாமல், நோயும் கொடியும் அவனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/31&oldid=687694" இலிருந்து மீள்விக்கப்பட்டது