பக்கம்:அமல நாதன்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 அமல நாதன்

கள் கூறிச் சென்றுள்ளனர். சானும் வளர்க்க அடி யேன் படுத்துயரம் சற்றல்லவே' என்றர் முற்றுக் துறந்த பட்டினத்தடிகள். இடும்பை கூர் என் வயிறே உன்ைேடு வாழ்தல் அரிது’ என்ரர் ஒளவை மூதாட்டியார். இவ்வாறு இருக்கப் பசியை எவ்வாறு இவ்விளைஞனுல் பொறுத்திருக்க இயலும். ஆகவே,அங்கத்தைகளை அவன் அயின்றன் அந்தோ' சிறிது நேரத்திற்கெல்லாம் இளைஞனுக்கு வயிற்று நோய் கண்டது. அவன் சொல்லொணுத் துயர் உற்றன். வாந்தியும் எடுத்தான். அதல்ை தின் றவை யாவும் வெளியில் வந்தன. இதனுல் சிறிது சோர்வுற்றன். மீண்டும் பசி எடுக்கத் தொடங்கியது. என் செய்வான் இளைஞன் மீண்டும் அந்த இறைச் சிப் பொருளையே உண்ணத் தொடங்கின்ை. ஆனல் இந்த முறை அவை அவனுக்கு யாதொரு துன்பமும், கொடுத்தில. வயிற்று நோயும் வரவில்லை. வாந்தி இல்லை. பகற்பொழுதை இவ்வாறு பொருத்த மற்ற உணவை உண்டு காலங் கழித்தான். இரவில் வெட்ட வெளியில் இல்லாமல் மலையில் ஒரு குகையில் தங்கி அவ்விரவைக் கழித்தான் இவன் தங்கியிருந்த தீவுக்கு அடுத்த தீவு மக்கள் வாழும் தீவாக இவனுக்குத் தென்பட்டது. அங்குச் சில: விடுகளின் புகைக் கூண்டுகளிலிருந்து புகைவரும் குறிகள் தோற்றம் அளித்தன. ஆனல் என் செய்ய இயலும் அடுத்த தீவை எப்படி அடைவது என்பது தான் அவன் யோசனை. :

- மழை ஒய்ந்திலது. அடுத்த நாளும் பொழிந்து கொண்டிருந்தது. இரண்டாம் நாளும் அமலநாதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/55&oldid=687718" இலிருந்து மீள்விக்கப்பட்டது