蔷要 அமல நாதன்
மனம் பெரிதும் இளகினர். அமலநாதன் அழகும் அமைதியும் உடையவனுகக் காணப்பட்டமையால், அவன்மீது இரக்கங்கொண்ட அவ்விரு முது தம்பதி கள் அவனேக் கேற்றித் தம் மகனெனவே பாவித்து, அவனுக்கு நல்ல உணவு ஈந்து, அவனுடைய களைப் பைப் போக்கினர். , அமலநாதன் அன்று இரவு அங்குத் தங்கி நன்கு உறங்கினன். காலேயிலும் எழுங் திருக்காமல் தொடர்ந்து துணங்கின்ை. பாவம் ! அவ் வளவு களப்பை அவன் கடந்த கான்கு காட்களாகப் பெற்றிருந்தான் அல்லவா? இவ்வாறு தன் சோர்வு ரே உறங்கி எழுத்தபின் மருந்தும் விருந்தும் மூன்று நாட்களுக்குமேல் கூடாது என்பதற்கிணங்க, அத் கம்பதிகளிடம் இருந்து விடைபெற்றுத் தன் பயணத்தை மேலே தொடங்க எண்ணி, அம்முதி யோர் தனக்குச் செய்த உபகாரத்திற்காகப் பெரு கன்றி செலுத்திப் புறப்பட்டான்.
அமலநாதன் வழிக் கொண்டான். ஆனல் எக்கச் சாலேயின் வழியே செல்லவேண்டும் என்பது அவனுக் குத் தெரியவில்லை. அத்துணே கவர்பட்ட சாலைகள் அங்கு இருந்தன. இவனுக்கு கன்முறையில் வழி காட்டுகிறவர்களும் எவரும் இலர். சிலருக்கு இவனது செந்தமிழ் தெரிந்திருந்தும் தெரியாததுபோல் பாவனேசெய்து பராமுகமாய்ச் சென்றனர். வாயைத் திறந்தால் வாய் முத்தம் சித்தும் என்று கருதினர் போலும்! வேறு சிலர் அமலநாதன் வெளிநாட்டவன் என்று அறிந்து இவனிடம் இருந்து பணம் பறிக்கக் கருத்தாய் இருந்தனர். இவ்வாறு பணம்பெற விரும் புகிறவர்கள் ஏழைகளாயினும் தம்மை ஏழைகள்