பக்கம்:அமிர்தம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

* ஸார், இன்னெரு லெட்டர் உங்களுக்கு; முதலில் கொடுக்க மறந்துவிட்டேன் ” என்று சொல்லிக்கொண்டே ஒரு கடிதத்தைக் கொடுத்துச் சென்றான் தபால்காரன்.

மதுரையில் நடக்கும் சுவாமிநாதய்யர் வீட்டுக் கல்யானத்துக்கு அவசியம் போய்வர வேண்டுமென்று அம்மா எழுதியிருந்தாள். அந்தக் கடிதத்தைப் பார்த்த சுந்தரேசனுக்கு வியப்பு மேலிட்டது. அந்த வீட்டைப்பற்றி அம்மாவுக்கு எப்படித் தெரியும்? அவள் அவ்வளவு அக்கரையாகக் கல்யாணத்திற்குப் போகச் சொல்லும் காரணம் என்ன

சுந்தரேசனுக்கு ஒன்றும் புரியவில்லை. சாதாரண விஷயங்களுக்கெல்லாம் மூளையைக் குழப்பிக்கொண்டு, காலத்தை விரயப்படுத்தக் கூடாதென்பது அவன் கருத்து. ஆகவே அவன் கல்யாணத்துக்குப் போவதென்று முடிவு செய்தான்.

‘போட்டோஆல்ப” த்தில் காணப்பட்ட அங்தப் படத்தைச் சுந்தரேசன் எவ்வளவு நேரம்தான் கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தானே தெரியாது. நினைவின் சுழற்சியில் எண்ணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அவன் மனதில் அலைபாய்ந்தெழுந்தன. 

“மீன” என்ற இரண்டு எழுத்துக்கள் போட்டோ வின் கீழ் இருந்தன. மீனு வேறு யாருமில்லை; புவளுவின் உடன்பிறந்த தங்கை. புவளுவின் முகூர்த்தப் பத்திரிகையைப் பார்த்ததிலிருந்து அவனுடைய இதய அந்தசங்கத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஆசை காட்டி நின்ற அந்த மீனுவின் எழில் பிம்பம் காட்சியளித்தது. மீனுவின் நினைவு முகமே அவனைப் புவளுவைப்பற்றி அதிகம் - நினைக்கத் தாண்டியது. .

மதுரையிலிருந்து மாற்றலாகி அவன் தஞ்சாவூருக்கு வந்த ஒரு வருஷம் இருக்கலாம். அதற்குள் எத்தனையோ தடவை அந்த இரு சகோதரிகளைப்பற்றியும் அவன்.

24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/26&oldid=1195380" இலிருந்து மீள்விக்கப்பட்டது