பக்கம்:அமிர்தம்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நினைத்துப் பார்த்ததுண்டு. புவன ஊமை என்ற விஷயம் மீன சொல்லத்தான் சுந்தரேசனுக்குத் தெரியவந்தது. அதுமுதற்கொண்டு புவனமீது அவனுக்கு ஒரு தனி அனுதாபம்.

முன் பாவாடை, தாவணி சகிதம் காட்சியளித்து மனம் விட்டுப் பழகிப் பேசிவந்த மீனு இதற்குள் எப்படி எப்படி மாறிவிட்டிருப்பாளோ? என்று எண்ணினன்.

அப்போது அவன் மதுசை கலெக்டர் ஆபீஸில் ‘கிளார்க்’ ‘காக வேலைக்கு வந்தான். வேலைக்குப் புதிதாகையால் அவனுக்கு ஆபீஸில் முதலில் பழககம் ஆனவா் சுவாமிநாதய்யர்தான். அத்துடன் அவர் தம் வீட்டின் முன்னிருந்த ஒரு அறையையும் அவனுக்கென்று ஒதுக்கிக் கொடுத்தார்.

ஒருநாள் “லார், ‘காம்பவுண்ட் இன்டரெஸ்ட்’ கணக்கு ஒன்று புரியவில்லை. அப்பா உங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளச் சொன்னர்” என்று மீன அறிமுகப் படுத்திக்கொண்டாள் முதன் முதலாக, அதுமுதல் பாடத்தில் சந்தேகங்கள் கேட்கும் வியாஜத்தில் மீளு அடிக்கடி சுந்தரேசன் அறைக்கு வாலானள். சுந்தரேசனும் அவளுடன் செளஜன்யமாகப் பழகிவந்தான்.

அன்று வீடு கலகலப்பாக இருந்தது. பிடில் நாதம் இங்கிதமாகக் காற்றில் இழைந்தது. என்ன விசேஷம் என்று சுந்தரேசனுக்கு விளங்கவில்லை. அப்பொழுது கையில் காப்பியுடன் மீனு உள்ளே நுழைந்தாள். அத்துடன் பகூணங்களும் இருந்தன.

‘லார், எடுத்துக்கொள்ளுங்கள். நாலைந்து மாதமாக அத்தை வீட்டில் இருந்த அக்காள் இன்று அம்மாஞ்சியுடன் ஊருக்கு வந்திருக்கிறாள். வேறென்றுமில்லை.” பகூணங்களைச் சுவைத்த வண்ணம், “உன் சொந்த அக்காளா, மீனு? எனக்குத் தெரியாதே|” என்முன் சுந்த

25
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/27&oldid=1195391" இலிருந்து மீள்விக்கப்பட்டது