பக்கம்:அமிர்தம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரேசன். ஆனால் அப்படிச் சொன்ன பிற்பாடுதான் என் அவ்விதம் கேட்டோமென்றிருந்தது அவனுக்கு.

சொல்லி வைத்தாற்போல அதேசமயம் குழாயில் தண்ணிர் பிடித்துச் சென்றாள் புவன. ஒருமுறை அவளே அப்படியே விழுங்கிவிடுபவன் போலப் பார்த்து நின்ற சுந்தரேசனைக் கண்டதும், மீளு என்ன நினனத்தாளோ?

“ஸார், அவள்தான் புவன! என் அக்காள். ஆனால் பாவம்...”

“என்ன மீனு ‘ என்று கவலையுடன் கேட்டான் சுந்தரேசன்.

“இவ்வளவு அழகைக் கொடுத்திருக்கும் பகவான் அவள் ஊமையையும் போக்கடித்துவிட்டால்...” என்று. நிறுத்தினுள். அவள் குரல் கம்மியது.

சுந்தரேசன் அதற்குமேல் பேசவில்லை. புவணுவின் வருங்கால வாழ்க்கை அவன் உள்ளத்திலே அனுதாபத்தை உண்டுபண்ணியது.

அடுத்த நாள் எதிர்பாராதவிதமாகச் சுந்தரேசனைத் தஞ்சாவூருக்கு மாற்றிவிட்டார்கள். சுவாமிநாதய்யரிடம் விடை பெற்றுச் செல்லுகையில் கண்கலங்க நின்ற மீனுவும் புவளுவும் அவன் கண்களைவிட்டு அகலவில்லை.

சுபயோக சுபதினத்தில் புவன மிஸ்ஸ் விசுவநாதனுக மாறும் வைபவத்தைக் காண்பதற்காக ஆஜராளுன் சுந்தரேசன். கல்யாண வீட்டில் மாப்பிள்ளைகளுக்கு நடப்பதைக் காட்டிலும் ஒருபடி மேலாகத் தனக்கு ராஜோபசாசம் நடப்பதைக் கண்டு ஆச்சர்யப்பட்டுப் போனுன் சுந்தரேசன்.

புது மாப்பிள்ளை விசுவநாதன் ரொம்பவும் குஷாலாகச் சுந்தசேசனுடன் அரட்டையடித்துக் கொண்டிருந்தான். ஆனாலும் சுந்ரோசனுக்கு விசுவநாதன் ஒரு புதிதாகவே தோற்றமளித்தான். தான் கைபிடித்த மனேவி ஊமை என்பதறிந்தும் அதைப்பற்றி லவலேசமும் விசுவநாதன்

26
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/28&oldid=1195401" இலிருந்து மீள்விக்கப்பட்டது