பக்கம்:அமிர்தம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விலாசத்தைக் கண்டுகொண்டான். சில நாள் கழித்துத் தன் பேருக்குக் கடிதம் ஒன்று வர முத்திசையை வீரப்பன் பார்த்தான். ஊர் முத்திசை! அவசரமாகத் தபாலை உடைத்தான். வீரப்பனுக்கு மகிழ்ச்சி தாங்க்வில்லை. வடிவழகி இவ்வளவு அந்தமாகவும், அழகாகவும் தனிப்படக் கடிதம் எழுதித் தனக்குப் போடுவாள் என்று அவன் சிறிதும் எதிர்பார்த்தவனல்லவே! தன்னைப் படிக்கத் தெரியாதவள் என்ற ஒரே காரணத்துக்காகப் புறக்கணித்ததால் மனம் சொந்த அவள், வாத்தியாசம்மாவிடம் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்ட விருத்தாந்தம் முழுவதையும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாள்.

பாரதியாரின் ‘புதுமைப் பெண்’ சுவட்டில் அழகு காட்டி நிற்கும் வடிவழகியை இனிக் கைத்தலம்பற்ற வீரப்பனுக்கு என்ன தயக்கம் தன் முன் வரவேற்புக் கூறி விரிந்தி கிடக்கும் எதிர்காலத்தை எண்ணிப் பார்த்தான். வாழ்வின் வழிகாட்டியாக விளங்கிய லட்சியத் தம்பதிகள் பலரின் கிழல் சித்திரங்கள் அவன் நினைவில் அடங்கிச் சென்றன. -

ருநாள் வீசப்பனும் வடிவழகியும் இருமனம் ஒன்று சேர் தம்பதிகளாயினர். .

அன்று பள்ளிக்கூடத்து வாத்தியாசம்மாவைக் கண்டு வரப் புறப்பட்டான் வீசப்பன். - அம்மா, உங்கள் உதவிக்கு நான் மிகவும் கடமைப் பட்டவன். நீங்கள் மாத்திசம் அடிக்கடி வடிவைத் துண்டியிராவிட்டால் இவ்வளவு எளிதில் அவள் படித்துக் கொண்டிருக்கச் சாத்தியப்படுமா10.’ என்று சொல்லிப் புடவை ஒன்றை அவளிடம் சமர்ப்பித்தான். 。...”。

“வீரப்பன், ஆச்சரியமாக இருக்கிறதே! கொஞ்சகேசத் துக்கு முன்தான் உங்கள்_வடிவு வந்து புடவை, பழங்கள் எல்லாம் கட்டாயப்படுத்திக் கொடுத்துவிட்டுப் போனுள். கேட்டதற்குக் காணம் என்ன சொன்னுள் பாருங்களேன்.

34

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/36&oldid=1198364" இலிருந்து மீள்விக்கப்பட்டது