பக்கம்:அமிர்தம்.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பணம் கொடுத்து ஒத்தாசை செய்ததில் என்ன தவறு இருக்க முடியும்?

“வள்ளி, கோவப்படாதே! நான்கூட உன்கிட்டே பணத்தைக் கேட்டது பொன்னுருவி மகள் வைத்தியத்துக் காகத்தான். முன்னாடியே உள்ளதைச் சொல்லியிருக்கப் படாதா? காசி உனக்குச் சொந்தமின்னு எனக்குத் தெரியாதே. ஊம்; பணம் எப்படினாச்சும் அதுங்கிட்டே சேர்ந்தாச் சரி.”

றுநாள் மாலை பொன்னுருவியின் வீட்டையடைந்ததும், அங்கு நிலவிய அசாதாரண அமைதியைக் கண்டு ஒரு கணம் திடுக்கிட்டான் தங்கவேல். பிள்ளைக்கு என்னவோ ஏதோ என்று பதறினான். “பொன்னுருவி மகளுக்கு ஆத்தா கருணையிலே ஏதும் நேர்ந்திடப்படாது” என்று பிரார்த்தித்துக் கொண்டே, அவன் உள்ளே நுழைந்தான்.

“அத்தான், உங்களைத்தான் எதிர்பார்த்துக்கிட்டிருந்தேன். குழந்தைக்கு ராத்திரி காச்சல் நெருப்பா யிருந்துச்சு. ராத்திரி பூராவும் சொரணை கூடக் கிடையாது மகளுக்கு!”

“பொன்னுருவி, எங்கே உன் புருசன் காசிலிங்கம்? அவன் கிட்டே என் பெண்சாதி அஞ்சு ரூவா கொடுத்துச்சாமே. மகளுக்கு வைத்தியத்துக்கு வேணுமின்னனாம். அத்தானுச்சேன்னு இரக்கப்பட்டுப் பணத்தைக் காலம் பரவே கொடுத்தாச்சாமே!”

“அத்தான், அதிசயமால்ல இருக்குது! எம் புருசன் காலையிலேருந்து கண்ணுப்புறத்தால்லே கூட காணலேயே! ஐயையோ, பொய் சொல்லி மறுபடியும் பணத்தை வச்சுச் சூதாடியிருக்கும்!” என்று சொல்லித் தடித்தாள் பேதை.

காசிலிங்கத்தின் தந்திரத்தால், சீட்டாட்டத்தில்தான் விசயமடைந்திருக்க வேண்டும் அவனிடம் கொடுத்திருந்த ரூபாய் ஐந்தும் என்று ஊகித்துத் கொண்டான் தங்கவேல். மேலும் காலத்தைப் போக்க எண்ணாமல் ஓடிப் போய்

52

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/54&oldid=1310401" இலிருந்து மீள்விக்கப்பட்டது