பக்கம்:அமிர்தம்.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

லதாவின் கடிதத்தில்

...அப்போது ரோஜா மலர்கள் புடைசூழ அவற்றின் பரிமள வாசனையிடையே திளைத்து வீற்றிருந்திர்கள் தாங்கள். ஆமாம்; தங்கள் போட்டோவைத் தான் குறிப்பிடுகிறேன்...

அத்தை மகள்


“ஸார் தபால்.”

திரும்பிப் பார்த்தேன். எதிரே தபால்காரன் கையில் கடிதத்தை ஏந்திய வண்ணம் வருவதைக் கண்டதும், குறிப்பறிந்த என் கைகள் கடிதத்தைப் பற்றின. பார்வை உறை யின்மீது சென்றது. நான் அதிசயித்துவிட்டேன். ‘ஏர் மெயில்’ மூலம் பர்மாவிலிருந்து அக்கடிதம் வந்திருந்தது. என்னேயும் அறியாமல் ஏதோ ஒருவித சக்தி உந்தித்தள்ள கடிதத்தைப் பிரித்துப் படித்தேன். கண்கள் கலங்கிவிட்டன.

ஆமாம்; லதா ரங்கூனிலிருந்து எழுதியிருக்கிருள். ஆஹா! பெண்மையின் பரிவு எத்துணை தூரம் என்மீது பதிந்து, அவ்வளவு காலமாக தன்னுள் அடக்கி வைத் திருந்த அன்பு முழுவதையும் வெளிக்காட்டி இந்தக்கடிதத்தை எழுதியிருக்கின்றாள். ஆனல்...!

ஆம்; சுஜாதா! தன் அன்பு வலையில் என்னை சிக்க வைத்து வேடிக்கை பார்த்து விளையாடும் அவள் கதி...!

எவ்வளவு நாழிகை வாசல் காம்பவுண்டில் சாய்ந்து சிந்தித்துக்கொண்டிருந்தேனே தெரியவில்லை. சித்தம் கலந்தது. திரும்பி என் அறைக்குள் நுழைந்தவுடன், கண்ணுடியில் தன் யெளவனப் பொலிவின் பூரிப்பிலே மயங்கி நின்ற சுஜாதாவைக் கண்டேன். என் வரவு கண்டு

56

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/58&oldid=1319072" இலிருந்து மீள்விக்கப்பட்டது