பக்கம்:அமிர்தம்.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கையில் எந்திய தீபத்துடன் வெளியே வந்த பூவாயி, தன் கணவனை ஒரு விசை ஏற இறங்கப் பார்த்தாள். பிரமை பிடித்து மலைத்திருந்த கண்மணியின் முகத்தைக் கண்ட பூவாயிக்கு ஏனோ பயமாகப் போய்விட்டது. கூண்டினுள் நுழையும் பைங்கிளியைப்போன்று தட்டுத் தடுமாறினுள் அவள். கடந்த சில நாட்களாகவே அவள் அடிக்கடி ஊர்ப் பேச்சுக்களப்பற்றிப் புலன் விசாரித்த வண்ணமாகவே இருந்தாள். காலத்தவறி இரவு வேளைகளில் தன் புருஷன் மனை மிதிப்பதற்குள் பூவாயிக்கு ஜீவன் அவள் வசம் தங்கமாட்டாது.

“என்னாங்க என்னமோ போல ஒரு மாதிரி உட்கார்ந்திருக்கிங்களே எதாச்சும் தவசல்-”

“தகவல் என்ன பூவாயி சும்மா போறவனை வலிய வம்புக்கு இழுக்க ஆசைப்படுறானாம் வடிவேலு. வெள்ளம் தலைக்கு மேலே போனதுக்கப்புறம் சாண் போனால் என்ன முழம் போனா என்னாங்கற கதைதான். அடுத்த கிழமை ஐயனாரு திருநாளைக்கு வடிவேலுவே தான் குதிரை எடுக்கப் போறானாம், எப்படியிருக்குது சேதி? வழக்கமா நடக்கும் முறைப் பிரகாரம் பார்த்தா நம்பதானே இந்த வருசத்துக்குக் குதிரை எடுப்புக் கொண்டாட வேண்டியவுங்க?”

“அப்படீன்னா வடிவேலுதான் திருவிழா துவக்கிறதுன்னு முடிவாயிருச்சாமா? ஊராருங்க ஏதும் சொல்லலையா?”

“ஊராருங்களா? நீபொம்பளைதானே. ஊராவது ஒண்ணாவது! பணக்காரன் பாரு அந்தப் பயமவன். இடிச்ச புளிமாதிரி எல்லோரும் வாயடைச்சுப் போயிட்டானுங்க போல. ஆனா பாரு, பூவாயி, இந்தத்தரம் நான் முதல்லே ‘குதிசை எடுப்பு’ ஆரம்பிச்சுத் திருநாள் நடத்தல்லே அப்புறம்...” என்று கூறி முடிப்பதற்குள் இடைமறித்த பூவாயி, “உஷ்; பேசாதிங்க! சேதி உருப்படியா வந்து

87

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/89&oldid=1322896" இலிருந்து மீள்விக்கப்பட்டது