பக்கம்:அமிர்தம்.pdf/92

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தான் வீடு திரும்பிக்கொண்டிருந்தாள். மாணிக்கமும் வந்திருந்தான். இரண்டு பேரையும் ஜோடியாகக் கண்டதும் அப்படியே சீறி விழுந்தான் பூவாயியின் தகப்பன்.

“பூவாயி, பெரிய பெண்ணா லட்சணமா இல்லையே! யாரோ ஒரு வழிப்போக்கனோடே கூடமாடப் பேசிப் பழகினா லேசிலே போகக்கூடிய தகவலா? அப்புறம் ஊர் வாயைத்தான் மூட ஏலுமா? இன்னிக்குச் சொல்றேன். இனி இப்படி அந்தப் பயலோடு ஒரு பேச்சுக்கூடப் பேசக் கூடாது. மீறிப் பேசினதைக் கண்டா பெத்த மகளின்னு, பாராமல்கூடக் கொடுவாளாலே உன் தலையைச் சிவிப் போடுவேன்......” என்று எச்சரித்தான். அத்துடன் மாணிக்கத்தை நோக்கி, “ஏய் பயலே, ஊரு தேடவந்தவன். ஒழுங்கா முறையா இருக்கமாட்டாய்போலத் தோனுதே! ஜாக்கிரதையா இருந்தா இரு இல்லாட்டி உன் குடிசை பறிபோயிடும். ஆமா, சொல்லிவிட்டேன்” என்று கர்ஜித் தான் அம்பலகாரன்.

அன்று ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டவர்கள்தாம். அப்புறம் நாளதுவரை வருடங்கள் இாண்டு ஓடி விட்டன. மாணிக்கத்தைப்பற்றிய விபாமே தெரியவில்லை.

மறுநாள் தன் மகளை அம்பலம் வாஞ்சையுடன் அருகில் அழைத்து, “பூவாயி, நேத்து உன்னைக் கோவிச் சதுக்கு மனசு கலங்காதே. உன் நன்மைககோசரம்தானே இவ்வளவு பாடாய்ப்படறேன் நான். நம்பி கண்மணி அடுத்த மாசம் பினைங்குச் சீமையிலேருத்து வரதாகத், தபால் போட்டிருக்கு. அதுக்கு உன்னைப் பரிசம் போட்டிருக்கிறப்போ, அன்னியவங்களோடு சகவாசம் வச்சிருக் தாப் பார்க்கிறவுங்க என்னதான் எண்ணமாட்டாங்க—” என்று புத்தி புகட்டினான்.

காலம் கரைந்தது. பூவாயியினது பூங்கரம் பற்றினான் கண்மணி, நல்ல பொருத்தம் என்று பேசிக்கொண்டார்கள்.

90

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/92&oldid=1313483" இலிருந்து மீள்விக்கப்பட்டது