பக்கம்:அமிர்தம்.pdf/96

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கண்மணிக்கு எல்லாம் புதிர்போலத் தோன்றியது. இருந்தும் நடையைக் கட்டினான் வடிவேலுவிடம், அங்கே கண்ட காட்சி அவனை அளவற்ற அனுதாபத்திற்குள்ளாக்கியது. பாவம், துடித்துக்கிடந்தான் வடிவேலு. தன்னை எதிர்க்க அத்தனை ஆள் கட்டுடன் வரும்போதுதான் இப்படி அவனுக்குத் தேள் கொட்டியிருக்கற தென்பதை அறிந்ததும் அவனுக்கு ஒருபுறம் வியப்பாகவும் இருந்தது.

“கண்மணி, ஐயனாரு எனக்குக் கண்ணைக்திறந்து விட்டிருச்சு. வழக்கத்தை விடாமல் காலம்பற குதிரை எடுப்புத் தொடங்கி திருகாளை சிறப்பா நடத்த ஏற்பாடு பண்ணு. உன் பொறுமைககு ஈடேயில்லை. உனக்குத் தீங்க பண்ண எண்ணினா என்ன சாமி செம்மையாத் தண்டிச்சுப்பிட்டாரு. ஐயோ; வலி பொறுக்கலையே......” என்று புலம்பிப் புரண்டான் வடிவேலு.

உடனே கண்மணியின் முயற்சியால் விஷம் லேசாக இறங்கிவந்தது. மறுபிறவி பெற்றவனைப்போல வடிவேலு களிப்புற்றான்.

உலக ஞாபகம் அப்பொழுது தான் வரப்பெற்றவர்களைப்போலப் பூவாயியும் மாணிக்கமும் ஒருவரையொருவர் அதிசயத்துடன் பார்த்துக்கொண்டனர்.

“மாணிக்கம், உங்களுக்கு நானும் அத்தானும் ரொம்ப ரொம்பக் கடமைப்பட்டிருக்கோம். இந்த ரெண்டு வருசமா உங்களைக் கண்ணாலே காணக்கூட முடியலேயே. நீங்க மட்டும்தான் வந்திங்களா? உங்க பெண்டாட்டியையும் கூட்டி வரதுதானே திருநாளைக்கு?” என்று வாத்ஸல்யம் வழிந்தோடச் சிறு குழந்தைபோல்க் கேட்டாள் பூவாயி.

“பூவாயி, எனத்குப் பெண்டாட்டியா? நிகரற்ற ஏழை அனாதைக்குக் கல்யாணம் ஒன்றுதான் குறைச் சலா? அதைப்பற்றிய கவலைகூட எனக்குக் கிடையாது. ஆனா இன்னிக்குத்தான் எனக்கு என்னைப் பழைய

94

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/96&oldid=1320967" இலிருந்து மீள்விக்கப்பட்டது