பக்கம்:அமுதக் கலசம் 1964.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விரோதியா நண்பனா? காவியம் செய்தது நானென்றேன்-அதன் கருத்தாக நிற்பது யாரென்றாய் ? ஓவியம் செய்தது நானென்றேன்- அந்த உருவத்தின் உட்பொருள் யாரென்றாய்? வானத்தை அளந்தது நானென்றேன் - அந்த வல்லமை தந்தது யாரென்றாய் ? மோனத்தி லாழ்ந்ததும் நானென்றேன்-உன் முன்னாலே நிற்பது யாரென்றாய்? காரியம் செய்வது நானென்றேன்-அதன் காரணம் யாரென்று கேட்கின்றாய்? வீரியம் பேசிடும் ஆண்டவனே - நீஎன் விரோதியா நண்பனா சொல்லிவிடு ! 119