பக்கம்:அமுதக் கலசம் 1964.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்த்துக் கூறுவோம் ! ஏர்பிடிக்கும் கைகளுக்கே வாழ்த்துக் கூறுவோம்!- வறுமை ஏகும்வகை செய்பவர்க்கே வாழ்த்துக் கூறுவோம்!- என்றும் ஊர் செழிக்கத் தொழில்செய்யும் உழைப்பாளிகள்-வாழ்வு உயரும்வகை செய்பவர்க்கே வாழ்த்துக் கூறுவோம்! கட்டும்உடை கஞ்சித்தொல்லை என்றே தினமும் - நாட்டில் சுற்றியலை வோரின் துயர் தன்னை அகற்ற - நல்ல திட்டம்கண்டு செயலாற்றும் தீரர் தமையே-தினம் தீந்தமிழால் வாழ்கவென்றே வாழ்த்துக் கூறுவோம்! எந்திரங்கள் கைத்தொழில்கள் எங்கும் செழிக்க - நாட்டில் ஏழைபணக் காரன்என்ற பேதம் ஒழிக்க- எண்ணி மந்திரியாய் வந்தமரும் மானுடர் கொற்றம் - நாளும் வாழ்கவாழ்க என்றுசதா வாழ்த்துக் கூறுவோம்! கலைவளர மொழிவளர தொழில்கள் வளர- மக்கள் கற்பும் பண்பும் கொண்டு என்றும் வளர்ந்தே உயர - வாழ்வில் உலையாத தொல்லை ஏற்றே - சேவை செய்திடும் - நல்ல உத்தமர்கள் வாழ்க வென்றே வாழ்த்துக் கூறுவோம்! 73

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதக்_கலசம்_1964.pdf/76&oldid=1744223" இலிருந்து மீள்விக்கப்பட்டது