பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. جعه به நன்றியுரை சங்கீத வித்வான் மேலக்காவேரி ஏ.ஆர். கண்ணன் கலைமாமணி கவிஞர் கு.சா. கிருஷ்ணமூர்த்தி அவர் களின் கவிதைச் சிறப்பு பற்றியும், அருட்பா இசையரசி கலைமாமணி குருவாயூர் பொன்னம்மாள், அவர்களின் இசை ஞானத்திறம் பற்றியும், இசை உலகம் நன்கறியும். "அமுதத் தமிழிசை” என்னும் பெயரில் வெளிவரும் இந்நூலில் நூறு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இறை வழிபாடு, சான்ருேர்புகழ், சமூகநீதி, நாட்டுப்பற்று, தாய் மொழிச் சிறப்பு, ஆகிய பல்வேறு தலைப்புக்களில், சொற் சுவை, பொருட்சுவை, எதுகை, மோனை ஆகிய இலக்கணக் கட்டுக்கோப்பு எல்லாம் பொருந்தி,எளிமையும், இனிமையும், நிலவும் இவ்வருமையான பாடல்களுக்கு, இசை அமைக்கும் மாபெரும் பொறுப்பை இசையரசி குருவாயூர் பொன்னம் மாள் அவர்கள் ஏற்றுப், பிரபல இசை விற்பன்னர்களும் பாராட்டக் கூடிய விதத்தில், மிக நல்ல முறையில் அமைத்து வெற்றியும் கண்டிருக்கிரு.ர். இந்நூல் இசைபயிலும் மாணவ மாணவிகளுக்கும் இசை விற்பன்னர்களுக்கும் பெரிதும் பயன்படுமென்று நம்புகின்றேன். - இவ்வரும் பெரும் நற்பணியில் என்னையும் பங்குபெறச் செய்து, ஸ்வரக்குறிப்புக்கள் எழுதும் வாய்ப்பளித்ததை மிகப் பெரிய பேருகக் கருதுகிறேன் கவிஞர். திரு.கு.சா.கி. அவர்களுக்கும், இசையரசி திருமதி பொன்னம்மாள் அவர்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். 17-புதுத்தெரு, இங்ங்னம் சென்னை-4. மேலக்காவேரி 9-8-80 ஏ. ஆர். கண்ணன்