பக்கம்:அமுதவல்லி.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 4.ஆத்தா

          ஆதிபிரமர்

கங்குல் தாய் கறுநிறத் துகிலெடுத்து, அதைத் தொட்டிலாக்கி உலக மக்களைப் படுக்க வைத்துத் தாலாட்டுப் பாடிக் கொண்டிருந்த வேளை அது. பலருக்கு உறக்கம் பிடித்தது; சிலர் கொட்டாவிகளை எண்ணிக் கணக்கிட்டுப் பிரித்துக் கொண்டிருந்தனர்; எஞ்சியவர்களுக்குத் தூக்கம் வேம்பானது. இந்தக் கும்பலில் தான் அவளும் சேர்த்தி.

அவள் என்றால் மட்டும் போதுமா?-போதrது. அவளுக்கும் பெயர் ஒன்று உண்டு. பெயர் சூட்டும் நிகழ்ச்சி ஒரு விழாவாக அமையாமற் போனாலும், அந்தப் பெயரை அவளுக்கு இட்டு அழைப்பதற்கு அவளுடைய பெற்றோர்கள் எவ்வளவோ காலம் காத்துத் தவங்கிடந்தார்கள். 'பொறக்கப் போறது ஆண் குஞ்சாக இருக்கோணும். ஆதி பிரமர் சாமியே!' என்ற அவர்களது 'வேண்டுதலை' பலிக்கவில்லை; ஆனால் பிறந்த பெண் குழந்தை 'மூக்கும் முழியுமாக' இந்த மண்ணில் முதற் குரல் கொடுக்கத் தவற வில்லை.

அவள் பெயர் என்ன தெரியுமா? பொன்னரசி! பெயரைச் சொல்லும் உதடுகளில் கற்கண்டுச் சுவை வழிவதைப் போலவே, அவளைப் பார்க்கும் கண்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/100&oldid=1375408" இலிருந்து மீள்விக்கப்பட்டது