பக்கம்:அமுதவல்லி.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100 அமுதவல்லி

அவளும் நெஞ்சு வெடிக்க விம்மலானாள். துயரம் மண்டிய ஓலத்தினின்றும் பிரிந்து தெரிந்த அந்தக் குழந்தையின் கதறல் அவளுடைய நெஞ்சின் அடித் தளத்தில் சம்மட்டியாக இயங்கியது. பொன்னரசி துடித் தாள்: துவண்டாள்; உயிர்ப்பு விடை பெற்று விடும்போல ஒர் உணர்வு கிளர்ந்தெழுந்தது. வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள். உடுத்திருந்த முன்றானைக்குள் அவளது மேனி ஒளிந்தது.

 திருக்கோகரணத்தின் தலைவாயிலில் இருந்த பழைய அரமனை அப்போதைய மணி பனிரெண்டு என்று சொன்னது. பஸ் நிலையத்தில் இருந்தவள் கேட்டாள். அவலம் நிரம்பிய ஓலத்தில் சுருதி கம்மிப்பட்டிருந்தது. பொன்னரசி மெல்ல எழுந்து நடைபயின்றாள். ஆஞ்சநேயர் கோயிலைத் தாண்டிய இடத்தில் காணப்பட்டது இடிந்த சுவர்ப்பகுதி. அங்கிருந்து தான் அழுகை 'சிரித்துக்' கொண்டிருந்ததென்பதை உணர்ந்து கொண்டாள் அவள், பிரஹதாம்பாள் தெய்வத்தை எண்ணித் தொழுது அண்டினாள்: மண்டியிட்டுத் தரையில் உட்கார்ந்தாள். 'பச்சை மண்'அது. அடுத்துப் படுத்திருந்த பெண் தான் குழவியின் அன்னையாக இருக்க வேண்டும். மூடுதுணி எதுவுமில்லாமல் திறந்துகிடந்த 'தாய்மை’ யின் இருப்பிடத்திலே மதலை செப்புவாய் பற்றிச் சப்பிச்சப்பிப் பார்த்தது. பாலமுதம் சுரந்தால் தானே...? ஆகவே தான், தொண்டைக் குழியில் நோவு எடுக்கும் பரியந்தம் அப்படிக் கத்தித் தீர்த்தது. அது-அந்தப் பச்சைப் பாலகன். பெற்றவளுக்குக் குழந்தையை ஈன்ற கடமையுடன் செயல் முடிந்து விட்டது போலும்! அவள் தன் போக்கிலே ஆடாமல் அசையாமல் கண்வளர்த்து கொண்டிருந்தாள்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/102&oldid=1376347" இலிருந்து மீள்விக்கப்பட்டது