பக்கம்:அமுதவல்லி.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் 115 __________________________________

   "தம்பி, உன்னோட ஆத்தாவை நேரிலே கண்டா அவ பேரிலே ஒனக்கு ஆத்திரந்தான் வருமா?”
  “ஆமா; என் பேரிலே ரவை கூட ஈவிரக்கமில்லாம என்னை விட்டுப் போட்டுப் போன குற்றத்துக்கு அவங்க மேலே ஆத்திரம் தான் வரும்!”
  விக்கலுக்கும் விம்மலுக்கும் இடையில் பொன்னரசி தத்தளித்துக் கொண்டிருந்தாள் ; மறுவினாடி. பித்துப் பிடித்த மாதிரி கீழே கிடந்த பாறாங்கல்லில் மோதிக் கொண்டாள், ரத்தம் பீறிட்டுக் கொண்டிருந்தது.
   சிறுவன் அவளுடைய தோளைப் பற்றித் தடுத்தான்.
  அதே சமயம் வேறொரு புதுக்குரல் கேட்டது "ஏம்மா, ஏம்மா!" என்று ஓடி வந்தான் மீசைக்காரன் ஒருவன். அருகில் ரேக்ளா வண்டி நின்றது.
   பொன்னரசி தலை நிமிர்ந்தாள்: அந்த மனிதனைப் பார்த்தாள். விழுங்கி விடுபவள் போல முறைத் துப் பார்த்தாள். புகை நெளிந்தது. முடிச்சில் ஒளிந்திருந்த கத்தி அவள் கைக்கு வந்தது.
  செம்மறியாடுகளை மேய்க்கும் பையன் ஒன்றும் புரியாமல் பரக்கப் பரக்க விழித்தான்.
  "தம்பி, இந்த ஆளு தான் உன் அப்பன்!" என்றாள் அவள், வெறியுடன்....
 "ஆ! அப்பிடியா...?"
  மீசைக்கார மனிதனை நோக்கிக் கைக் கம்பை வீசினான் சிறுவன். அவன் சுருண்டு விழுந்தான், நெற்றியிலிருந்து ஊற்றெடுத்த ரத்த வெள்ளம் பூமித்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/117&oldid=1377223" இலிருந்து மீள்விக்கப்பட்டது