பக்கம்:அமுதவல்லி.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் ‌‌119 __________________________________

அமைந்திட வேண்டுமென்பது விதியாகவும் விதியின் விதியாகவும் அமைகிறது; அமையவும் வேண்டும்!

  உண்மை கொடிகட்டிப் பறந்திடவும் சத்தியமும், தருமமும் ஆனந்தக் கும்மி கொட்டிடவும் வாழ்ந்து காட்டத் துணிந்தவன் தான் பூங்காவனம்! ஏழ்மைக்குப் பிரதிநிதி தான். இருந்தால் என்னவாம்? அவள் மனம் விலைமதிக்க முடியாத சொக்கப் பச் சையாக அமைந்துவிட்டதே? போதாதா? 'போதும்' என்கிற மனம் அமைத்ததே அவளுக்குக் கிட்டிய பூர்வ ஜன்மப் புண்ணியம் தான்! ஆனாலும், அந்தப் புண்ணியத்தை மண்ணைக் கவ்வச் செய்யத் துணிந்த பாவப்பட்ட சோதனைகள் ஒன்றா, இரண்டா?
   குளமங்கலம் மண்ணுக்குக் குடிக் காணியாட்சிப் பாத்தியம், கொண்டாடிக் கொண்டிருந்த ஆண் பிள்ளைச் சிங்கம் வீரமுத்து, கண்டிக் கங்காணி கனக முத்துச்சேர்வைக்காரரின் பேரப்பிள்ளையாண்டான் என்னும் உறவையும் உரிமையையும் சவால் விட்டு. மெய்ப்படுத்திக் காட்டு பவன் மாதிரி, தன் முறைப் பெண்ணான அத்தை மகள் பூங்கா வனத்தை அடைந்திட ஒற்றைக் காலிலேயே தவம் செய்யலானான்!
  ஆனாலும், சூரப்புலி வீரமுத்துவை விடுதலைப் புலியாக- அதாகப்பட்டது, குரத்தனத்திலிருந்து விடுதலை செய்யப்பட்ட வெறும் புலியாக ஆக்கி வேடிக்கை பார்க்கவும் வேடிக்கை காட் டவும் புரட்சித் தமிழச்சியாகவே பூங்காவனம் அமைந்து விட்டாள்.
  ‘முடவன் எவனுமே கொம்புத் தேனுக்கு ஆசைப்படக்கூடாது என்கிற அனுபவச் சட்டத்தைக்கூட புரிஞ்சுக்கிடத் துப்புக் கெட்டுப் போயிட்ட துப்புக்கெட்ட என்னோட அம் மான் மகன் வீரமுத்து
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/121&oldid=1377259" இலிருந்து மீள்விக்கப்பட்டது