பக்கம்:அமுதவல்லி.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பூவை எஸ். ஆறுமுகம்

125


முத்துவின் முகத்திலே எச்சிலை உமிழ்ந்து, அவன் தலை முடிகளைப் பற்றிக் குலுக்கி அவன் முகத்தை நிமிர்த்தினாள் !

சூரியன் சுட்டெரித்தான்.

‘தெய்வம் திருவுள்ளத்துக்கும் அஞ்சாமல், ஒன் னோ ட சவால் படி என்னோட மஞ்சள் தாலியைப் பறிச்சுக் கிட்ட ஒன் னை அம் மாஞ்சுளுவிலே உசி ரோ ட விட்டுப் பூ டுவேனா, என்ன ? என் தாலி யைப் பறிச்சுக் கிடுற தாய் எங்கிட்டே நீ செஞ்ச சபதத்தை மெய்ப்படுத்திக் காட்டவேணும் என்கிற பாவப்பட்ட மிருக வெறியிலே எனக்கு எமனாகி, என் மச்சா மேலே நயவஞ்சனையிலே லாரியை ஏத்தி எந் தெய்வத்தைச் சாகடிச்ச உன் னைக் கடிச்சுக் குதறி உன்னை உசிரோடவே சாகடிச்சுப் பழி க்குப் பழி வாங்கிட்டு, நானும் எம்மச்சான் பின்னாடி சிவலோகம் பறிஞ்சிடுறேன்!”

வீரமுத்துவின் சிவப்பேறிய விழிகளிலே கடுநீர் தளும்புகிறது: “அயித் தை மகளே! ஒரு பொழுதிலே, நான் உன் தாலியைப் பறிச்சுக் கிடுறதாகச் சவால் விட்டது என்னமோ நிஜம் தான்! ஆனா, அதுக்கும் இப்ப ஏற்பட்ட விபத்துக்கும் சாமி சத்தியமாய் எந்தச் சம்பந்தமுமே கிடையாது; தவிர வும், லாரி யிலே அடிபட்ட ஆள் உம் புருசன் என்கிற தாக்கலே நீ சொல்லித் தான் எனக்கு விளங்கிச்சு - என்னைப் பழிக்குப் பழி வாங்க வேண்டி, நீ என்னோட உயிரைத் தாராளமாய் குடிச்சுப்புடு! நான் சம்மதிக்கிறேன். ஆனா, அதுக்கு ஊடாலே, நடந்த நடப்பைச் சொன்னால் தான் எம்மனசு ஆறும்..."

வீரமுத்து பேச்சை முடிக்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/127&oldid=1459992" இலிருந்து மீள்விக்கப்பட்டது