பக்கம்:அமுதவல்லி.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

I 30 அமுதவல்லி

நக்கிய பிஞ்ஞகனாக நாளை உன்னைச் சந்திக்கின்றேன். ஹ ஹ் ஹா! ... ஹ ஹ் ஹா...’

“மறந்து விடாதீர்கள் உங்கள் சபதத்தை” குளுரையை-வாதத்தை! ... நடன ரஸிகர்கள் தீர்ப்புச் சொல்லட்டும்; நாளை விடியட்டும். துரைராஜன் நடனத்தில் சிறந்தவரா? இல்லை, பார்வதி சிறந்தவளா?-அதோ, கலைங்கிரியிலே, வெள்ளைப் பணி மலை மீதிலே-ஏன், அந்த அலகிலா விளையாட்டுடை யானை முகத்தில் கூட இந்தக் கேள்விகளுக்குப் பதில் பிரதிபலிக்கிறதே?... என் மாதா பராசக்திகூடச் சொல்லாமல் சொல்லி என்னை ஆசிக்கிறாளே, வெற்றி என் பக்கம் தானேன்று! சந்திப்போம். நாளை!. ஹ ஹ்ஹா! ஹஹ் ஹா!... இந்தப் பார்வதிக்குத் தான் வெற்றி, வெற்றி, வெற்றி!’

“இந்தத் துரைராஜனைச் சுட்டெரித்து, அவன் சாம்பலைப் பூசிக்கொண்டு தான் நிற்கப் போகிறேன். அப்பொழுது தான் என் நாட்டியம் நிறையும். ஆமாம்; வெற்றி எனக்கேதான்! நான் பார்வதியல்லவா? என் அகந்தையை அந்தச் சிவனே கூட மாற்றவோ, மாற்றுக் குறைக்கவோ, முடியாது. நான் பார்வதி! “

நிஜமாகவா?”

“ஆம்” என்னுடைய அன்னை சக்தியின்மேல்

ஆணை .. இது மெய்யான சேதி, சகுந்தலா.’

“அப்படியென்றால்; நீ சோமநாதனைத் தான் கலியாணம் செய்து கொள்ளப் போகிறாயா? உனக்கு நடனம் பயில்வித்த-உன்னைக் காதலித்த,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/132&oldid=1376553" இலிருந்து மீள்விக்கப்பட்டது