பக்கம்:அமுதவல்லி.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் 133

தேவர்கள், நாரதர், கின்னரர்! மயானத்தாண்டவம்...!”

4.அதோ, சிவனுக்கு வெறி மூண்டு விட்டதே...?”

பார்வதியின் பாதங்களிலே எத்தகைய இந்திர ஜாலம் என்ன குழைவு ஸ்வரஜதியில் தான் எத் துணை ஜீவன், கற்பனை!”

‘தன்னை மறந்தலயம் என்கிறார்களே, இதுதானா? சிவனுக்கும் போட்டி வெறியா? சக்தியைத் தோற்கடிக்கச் செய்யும் சாகஸமா ? ஆ குழை நழுவி விட்டதே?’’

‘சங்கரியின் கண்களிலே ஏன் இந்தக் கலக்கம்?... சக்தி தான் பெரிதா?’’

“ஆஹா, அதோ, ஆதி கால் தூக்கி ஆடி அந்தக்

குழையைப் பாதத்தால் எடுத்துக் காதில் அணிந்து கொள்கிறாரே?’’

“சக்தி தோற்றுவிட்டாள்! அவள் பெண் தானே? அவளால் அப்படி முடியுமா, பாவம்?’’

“ஐயா, ரசிகரே? அதோ பாரும், சிவனுக்குப் போட்டியாக சக்தி காலைத் தூக்கி ஆடிவிட்டாள்...! சக்தி தான் ஜெயித்தாள். அவள் எங்கள் இனமல்ல ) வா ? ...”

“ ஆ!’

“ஐயோ, அக்ரமம்! புராணம் ஏடு திருப்பப்பட்டு விட்டதா?’’

‘நடனத்திலா?”

“இல்லை. நடப்பு உலகத்துக்கு."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/135&oldid=1376562" இலிருந்து மீள்விக்கப்பட்டது