பக்கம்:அமுதவல்லி.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம்

ஆவியில் ஒன்றையும் அவளுக்கென்று மிச்சம் வைக் காமல், மண்ணில் பதிந்து விண்ணுக்குச் சென்றுவிட்டான்! கொண்டவனும் கொண்டவளும் குப்பை கொட்டிய லட்சணத்துக்கு அடையாளமாகக் கிடைத்த பரிசான பதினாறு வயசு இள வட்டம் அக்கரைச் சீமைக்குச் சென்று இக்கரைக்கு வராமலேயே நாதியற்றுச் செத்து மடிந்து விட்டது.

‘நானு ஏதுக்காவ உசிரோடு இருக்கோணும்?'அலுத்துச் சலித் துப் போன தருணம் பார்த்து, இக் கேள்வி சம்மட்டியாக உருவாகி, அவளது தளர்ந்த நெஞ்சத்தினை மேலும் தளர்ச்சி யடையச் செய்யத் தவறுவது கிடையாது. ஒரு நாள், இரண்டு நாள் அனுபவம் மட்டும் அல்லவே இது?

வடித்த கஞ்சியின் சூடு ஆறிவிட்டது; வடிந்த கண்ணிரின் வெம்மை தணிந்தது. கிழவிக்குச் சிறு குடலைப் பெருங்குடல் கவ்வியது. காய்ச்சின கஞ்சி, வெங்காயம், உப்புக் கற்கள். துகையல் எல்லாம் அவளை வருந்தி வருந்தி அழைத்தன. குவளையில் கஞ்சியை ஊற்றினாள்: மடக் மடக் என்ற சத்தம் மூன்று வினாடிகளுக்கு ஒரு முறை கேட்டது. அரைக் கால் நாழி கூடத் தாண்டியிராது. கிண், கிண்’ என்று அவளுக்குத் தலை கனத்து வந்தது. பிறகு சுற்றவும் ஆரம்பித்தது. மறு வினாடி அவள் வாத்தி பண்ணி விட்டாள்.

அந்தி சந்திப் பொழுதிலே படுக்கக் கூடாதென்பார்கள் நாலுந் தெரிந்தவர்கள். இதற்குச் செல்லாயி விதிவிலக்கு!

எல்லார்க்கும் உண்டு இலையும் பழுப்பும்!பழமொழி இது. செல்லாயி பழுத்த இலை. பசுமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/141&oldid=1376575" இலிருந்து மீள்விக்கப்பட்டது