பக்கம்:அமுதவல்லி.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் ‌‌143 __________________________________

நடந்தாள் அவள். சோளக் கதிர்கள் உடலில் உரசின, வயல் வரப்புகள் 'பித்த வெடிப்பு'ப் பாதங்களை நோகச் செய்தன. "வா,பெரியம்மாயி!" “யாரது?” "நாந்தான் கந்தசாமி!" "ஒன்னைத்தா தேடி வந்தேன் தம்பீ!’ "பையப் பாத்து இங்கிட்டாலே கோவி வா...!”

"ம் . மேலுக்கு முடியல் லேப்பா...!”
“ஜய சேதி சொல்லப்புடாதா, பெரியம் மாயீ?”
“நாதி ஏது தம்பி?"
"ம்!"
“தம்பீ, உங்கிட்டே ஏம் பணம் எம்பிட்டு இருக்கு, நெனப்பு வருதா?”
"இருபத்தேழு ரூபா"
"அம்பிட்டும் எனக்கு. இப்பமே வேணும்!”
“ஆ!’
"என்ன தம்பி, அப்படி மலைச் சிட்டே?”
“ஒண்ணுமில்லே!’
"பொறவு?”
“ஆத்தா வூட்டுக்குப் போன எம்பொம்பளை அடுத்த கிளமை தான் வருவா;
 மதியத்துக்கு வீட்டுப் பக்கமா வா; உங்கச் செலவுக்கு ஒரு ரூபா தாரேன்!"
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/145&oldid=1378524" இலிருந்து மீள்விக்கப்பட்டது