பக்கம்:அமுதவல்லி.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் 13

    அமுதவல்லி பூங்கரங் குவித்துத் தொழுதாள். மோதிர விரல்களில் இழைந்த வைர மோதிரங்கள் கண் சிமிட்டின.
    இயற்கையும் செயற்கையும் கை பிணைத்து அமைத்துக் கொடுத்திருந்த அமுதச் சூழ்நிலையில் தங்களை மறந்து வீற்றிருந்த பெரிய மனிதர்கள் பதில் வணக்கம் சொன்னார்கள் வைரத்தின் ஒளிச் சிதறல்கள் ஒருபுறம் கண்ணைப் பறித்தன; வாசனைத் திரவியங்களின் சுகந்த வாடை மறுபுறம் கருத் தைக் குலுக்கின. "ரேடியோக்ராம்" தந்த இனிய பின்னணியில் நிலா விருந்து நடந்தது; முடிந்தது.
    நரை திரண்டிருந்த முடியைக் கோதிவிட்டவாறு சோமலிங்கம் அனைவருக்கும் பீடாக்களை வழங்கினான். பீடாத் தட்டை ஏந்தியிருந்த வேலப்பன் கிழிந்து தொங்கிய கந்தை வேஷ்டியைச் சரிப்படுத் தியவனாக, மானேஜரைத் தொடர்ந்தான்.
    குழுமியிருந்தவர்கள் ஒருவரோடு ஒருவர் காதுடன் காது சேர்த்து ஏதோ பேசினார்கள் இரண்டு நிமிஷங்களின் இடைவேளைக்குப் பிற்பாடு படத்தயாரிப்பாளர் பல வேசம் அவர்கள் ஆசனத்தை விட்டு எழுந்தார். "புகழ் ஏணியில் ஏறிவரும் குமாரி அமுதவல்லி அவர்களின் பிறந்த நாள் விழாவிலே எங்களுக்கெல்லாம் விருந்து வைத்து உபசாரம் செய்ததற்கு எல்லோருடைய சார்பிலும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது, என்னுடைய படத்துறை நண்பர்கள் நட்சத்திரம் அமுத வல்லிக்கு பிறந்த நாள் விழாப் பரிசுகள் கொடுக்கக் காத்திருக்கிறார்கள். அவைகளையும்  ஏற்றுக் கொண்டு எங்கள் எல்லோரையும் கெளரவிக்க
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/15&oldid=1179887" இலிருந்து மீள்விக்கப்பட்டது