பக்கம்:அமுதவல்லி.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் 155 __________________________________

அவல ஓலங்கள்.

சூன்யத்தில் ஊசலாடும் பாசக்கயிறு:

 ‘பார்வதி... ஐயோ, பார்வதி!’ என்று தலையில் அடித்துக் கொண்டான் சோமையா.
 “அம்மா .. அம்மா!” என்று பாபு மழலை அழுகையால் வெடித்தான்.
 “அத்தான் விதரனை புரிஞ்ச நீங்களே இப்படி அழுதால், அப்பாலே நம்ப பாபு-என் பாபு-உங்க பாபு பாவம், என்ன செய்வான்? அத்தான் நம்ப பாபுவுக்காக வாச்சும்- அவனை வளர்த்து ஆளாக்கணும் என்கிற பாசக் கடமையை உத்தேசிச்சாவது நீங்க என்னை மாதிரி நல்லவள் ஒருத்தியை ரெண்டாந்தாரம் பண்ணிக்கிட்டுத்தான் ஆகணும் கட்டா யம்!"
  பாபு கொடுத்து வைத்தவன். அலனுக்கு அம்மா வின் இறுதி முத்தமாவது கிடைத்தது.
  பார்வதி!...”
  பார்வதியின் ஸ்தானத்தில் தில்லை நாயகி அமர்ந்தாள்.
  பார்வதி கடைசியகக் குறித்த மாதிரி, சோமையா தன் அருமை மகன் பாபுவுக்காக வேண்டித் தான் தில்லை நாயகியைப் பெண் யாரக் கத் துணிந்தான். பூவை மாநகரிலிருந்து பேராவூரணிக் குப் புறப்பட்ட்.ான். அவளைப் பெண் பார்த்தான். அந்தப் பார்வையில் அனுதாபமும் அன்பும் ஒன்றை யொன்று போட்டியிடக் கண்டான். அழுகைக்கு ஊடே சற்றே மலர்ச்சி எட்டிப் பார்க்க முயன்றது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/157&oldid=1378546" இலிருந்து மீள்விக்கப்பட்டது