பக்கம்:அமுதவல்லி.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

அமுதவல்லி



காலம் இறந்த காலத்துக்கும் நடப்புக் காலத்துக்குமாகக் கண்ணாமூச்சி ஆட இருளும் ஒளியும் காலத்துக்கும் தூரத்துக்குமாக கண் பொத்தி விளையாட, இவ்விரு விளையாட்டுகளுக்கும் ஊடாக ஒரு விளையாட்டுப் பிள்ளையாகி சைக்கிளை அழுத்தி மிதித்துக் கொண்டேயிருந்தான் அவன் -சோமையா.

அறந்தாங்கி எல்லை ஆரம்பம்.

அந்தக் கட்டடம்; அறிஞர் அண்ணா அரசாங்க மருத்துவமனை,

“பார்வதி!”

நிதானம் தடம் புரண்டு, தடம் கண்டது.

அரிமளத்தில் பிறந்த புண்ணியவதி பார்வதி அவளுக்கு இங்கே சாவு எழுதிப் போட்டிருக்கிறது. ஒரு நாளா, இரண்டு நாளா? வள்ளிசாக மூன்று முழு மாசங்கள் விதியோடும் வினையோடும் போராடித் தோற்றவள் அவள், பாவி நான்!”

ஒரு தினம்:

தில்லை நாயகியை மணம் முடித்துக்கொண்ட புதிதில் அவளை இங்கே வைத்தியத்துக்காக அழைத்து வந்திருந்தான் அவன்.

கண்ணீர் கதை சொன்னது.

கண்ணீர் கதை கேட்டது. அக்கா...அக்கா !” ப்பூ!...முன் நிலவின் ஜம்பம் இவ்வளவுதானா?

அது; எக்ஸெல் தியேட்டர்!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/160&oldid=1439705" இலிருந்து மீள்விக்கப்பட்டது