பக்கம்:அமுதவல்லி.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் 163

பறந்தே வந்தான். வந்தவனின் கை கால்கள் வெட வெட"வென்று நடுங்கின.

செட்டியாரின் கறுத்த முகம் மேலும் கறுத்தால் எப்படி இருக்கும்?-பரிதாபம்! என்னப்பா நடந்திச்சு?'; என்று காட்டமாக விசாரித்தார்.

குடிமகன் கூத்தைச் செப்பினான் சோமையா. நேர் கொண்ட பார் வையைச் செலுத்தி, முதலாளி ஐயா, தப்பு என்னோடதுதானுங்க. நிலை தடுமாறி விழுந்திட்ட நான் பதட்டத்திலே அக்கம் பக்கத்திலே பார்க்கத் தவறி விட்டேன். அந்த நேரம் பார்த்து, சூனா பானா வேறு வந்து கடுசாப் பேசினார். எனக்குப் பொறி கலங்கிடுச்சி. டைனமோ பழுது பட்டுப் போனது கூடத் தெரியாது ஒடியாந்திருக்கேன் நான்!... உங்க கிட்டே வேலைக்கு வந்த இந்த ஆறு வருஷத்திலே நான் செஞ்ச முதல் தப்பு இதுதானுங்க! தயவுபண்ணி, என்னை நம்பி, இந்தத் தொகையை என் பேரிலே...’ என்று பம்மினான்!

முதலாளி சீறினார்

‘ஐயா, அந்தத் தொகையை பற் று எழுதிக்கிடுங்க. என் அதிர்ஷ்டம் தான் ஊர் அறிஞ்ச தியாச்சுங்களே, ஐயா! ஒண்ணும் யோசிக்காதீங்க. முதல் சம்சாரத்துக்காகவும் இப்போ ரெண்டாம் கல்யா ணத்துக்காகவும் ஏறியிருக்கக் கூடிய பற்றுவழி ரூபாய் ஆயிரத்து முன்னுாறுக்கு மாசாமாசம் இருபத்தஞ்சு மேனி பிடிச்சுக்கிடுங்க. இதுக்கும் வேணும்னா முப்பதாய் வேணும்னாலும் பிடிச்சுக் கிடுங்க, முதலாளி” என்று உயிர் துவள வேண்டினான் சோமையா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/165&oldid=1378152" இலிருந்து மீள்விக்கப்பட்டது