பக்கம்:அமுதவல்லி.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



178

அமுதவல்லி

றேனே? ஒரு வேளை அந்தத் தலையெழுத்தையே சிந்திக்க வைக்கப் போகிறானோ?

ஆம்!

வாணியிடம் சற்றுமுன் பேசினானே, அந்த வார்த்தைகள் கூக்குரலிட்டன: “ஆமாம், வாணி! நீ தானே நான்! நான் தானே நீ!’

முகுந்தனின் பெருமூச்சுக்கு உறவு முறை இனி எதி ற்கு ?

தாரா வின் பெருமூச்சு அவன் நெஞ்சடியில் முட்டி மோ தியது.

அவள் கையில் டவல் இருந்தது. சோப்பு டப்பா வேறு.

‘போய்விட்டு வா”

அவனால் அடுத்த அடி பெயர்த்து வைக்க முடிய வில்லை.

தாரா மீண்டாள். சோப்பு நுரையில்தான் அழகு ஒளிந்து கொண்டிருக்க வேண்டும். அவள் அவனை வெறிக்கப் பார்த்தாள். ஊமையாக, அழகியி ன் முன் பெரிய வக்கீல் கூட ஊமையாகப் போய்விட வேண்டு மாம். இப்பொழுது அழகியே ஊமையாகிவிட் டாளே! அவளுக்குக் கண்கள் பொங்கிவந்தன.

‘உனக்கு இன்னம் வேலை இருக்கா? மணி தான் ஐந்தாகப் போகுதே? உடல்நிலை சரியில்லையானால் வீட்டுக் குப் போய் ஒய்வு எடுத்துக் கொள்ளேன். நாளைக்கு வந்ததும் அந்த பாலன்ஸ் ஷீட்டை ைடப் பண்ணி விட்டால் தீர்ந்தது!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/180&oldid=1459994" இலிருந்து மீள்விக்கப்பட்டது