பக்கம்:அமுதவல்லி.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் 17

"எனக்கு இதெல்லாம் வேண்டாம்மா! எனக்கு என்னமோ இந்தப் பகட்டெல்லாம் சுத்தமாப் புடிக்கலேம்மா! இம்புட்டுச் சுகத்தையும் நான் முன்னே பின்னே அனுபவிச்சிருந்தாத்தானேம்மா எனக்கு இதெல்லாம் வளக்கமாயிருக்கும்?. எட்டடிக் குச்சிக்குள்ளே கூளும் கஞ்சியும் குடிச்சுக்கிட்டிருந்தவளுக்கு பாலும் பழத் தண்ணியும், விருந்துச் சோறும் எப்பிடிம்மா செல்லும்?.. இந்தாபாரு அமுதவல்லி! நான் ஒண்னு சொல்லுறேன், கேட்டுக்க, நீ சட்டுப் புட்டுண்ணு ஒரு கண்ணாலம் கட்டிக்கிடு அம்மா!... சொத்துக்குக் கயிட்டப்பட்டோம். அந்த நாளையிலே நன்மை யாரும் ஏறெடுத்தும் பார்க்கல்லே. ஆனா, ஆத்தா மாரி நம்மளைக் கண் தொடுத்துப் பார்த்தா, பணமும் காசும் களத்து மேட்டிலே துரத்திப் பொடைச்ச கைவிரச் சம்பா கணக்கிலே குமிஞ் சிருக்கு. இம்மாம் பணம் நமக்குப் போதும்! எனக்கோ வயசாயிடுச்சு. ஒன்னை தாலியும் மாலையுமாப் பார்க்க வேணும்னு ஆசையிலே துடிக்கிறேம்மா!' என்றாள் கிழவி, கண்ணீர் மாலை நீண்டது.

அன்னையின் விழி நீரைக் கண்ட அமுத வல்லிக்குப் பொறுக்கவில்லை. "அம்மா, உங்க இஷ்டப் பிரகாரம் செய்கிறேம்மா; என் கல்யாணத்தைப் பத்தித்தான் அம்மா யோசிச்சுக் கிட்டிருக்கேன்!" என்று பதில் பொழிந்தாள்.

‘மாப்பிள்ளை யாரு அம்மா...?’’

"அதைத் தான் யோசிக்கிறதுக்கு என்னம்மா

இருக்குது? நம்ம ஊரிலே இருக்கிற உன்னோட அம்மான்மவன் மாரியப்பனுக்குக் கடுதாசி போட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/19&oldid=1203561" இலிருந்து மீள்விக்கப்பட்டது