பக்கம்:அமுதவல்லி.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் 195


   கண்களைத் தீட்டிக் கொண்டு பார்த் தான். “தாரா என்ற இரண்டெழுத்துகள் பிறை நெற்றியில் ஒட்டப்பட்டிருந்தன. இருபது பேய் கொண்டவன் நிலை அவனுக்கு.
   தாராவை வேலையினின்று நீக்கிவிட வேண்டிய நிலையில் வைத்துவிட்டது வாணியின் உரிமைப் போர் . அப்பொழுது அவள் நிலவுப் புன்னகையும், காட்டாற்றுக் கண்ணீருமாக விடை பெற்றுச் சென்றதை அவன் ஏன் எண்ண வேண்டும்?
   அவன் உடம்பு சாம்பலாக ஆகும் வரை , நினைவை விட்டுப் பிரிவினை பெறாத ஒரு சம்பவம் அது தாராவுக்கும் முகுந்தனுக்கும் பிஞ்சுப் பிராயம். மணல்வீடு கட்டி புருஷன்-பெண் ஜாதி விளையாட்டு விளையாடினார்கள், அப்போது, அப்போது ?
   அந்த ஸ்பரிசத்தை, புரியாத சம்பந்தத்தை, நிறைவேற்ற முடியாத பருவத்திலிருந்த வெறியை எண்ணும் போதெல்லாம், வாணியில் தாராவைத் தரிசித்தான் அவன்-பாழாய்ப்போன ஆண் மனம் ! ஆனால், இப்போது-?
  "தாரா!"
  நாக்கின் மேலண்ணத்தில் தாரா ஒட்டிக் கொண்டாள்.
   பேய்க் காற்று; பேய் மழை. ஊழிக் கூத்து ரயில் தடம் புரண்டது, “ஐயோ!"-கோடிக் குரல்கள்!
   அடித்துப் போட்டாற் போலக் கிடந்தான் முகுந்தன். அவன் வலது கன்னத்தில் பதிந்திருந்த ஐந்து விரல்களில் ரத்தம் பீறிட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/197&oldid=1377839" இலிருந்து மீள்விக்கப்பட்டது