பக்கம்:அமுதவல்லி.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18 - அமுதவல்வி

வரவளையம்மா! நீ இன்னா அதுக்குக் கொள்ளை உசிராச்சே?...' என்றாள் கிழவி.

அமுதவல்லி சிரித்தாள். "அம்மா, உனக்கு உலகம் தெரியவே இல்லை அம்மா! தெருக் கூத்திலே ராஜபார்ட் போட்டுக்கிட்டுச் சுத்திக் கிட்டிருக்கிற அந்த ஆள் எனக்குப் புருஷனாவதா? ஐயோ பாவம்: தன்னை அடையப் போட்டியிட்டுக் கொண்டிருக்கும் டைரக்டர் ரமேஷ், ஹீரோ இந்திரஜித், வில்லன் வீர நாயகம், படத் தயாரிப்பாளர் புதுமை வேந்தன் ஆகியவர்களின் நினைவு முகங்களை அவள் எண்ணமிட்டாள். தலைவலித்தது. ஆகவே, அவள் தன்னுடைய தனி அறைக்கு ஒடிளாள். பீரோ வைத்திறந்தாள். ஏழைமையின் உருவம் ஒன்று படம் விரிந்தது. கடனுக்காக, குடியிருந்த வீட்டையும் கொல்லை குடிக்காட்டையும் இழந்து, அப்பாவையும் பறி கொடுத்து, நான் பட்டணத்திலே காலடி எடுத்து வச்சேன். ஒரு புண்ணியவான் எம்மேலே இரக்கம் காட்டி என்னைத் தன் மகளைப் போலக் காப்பாற்றினார். இந்த வாழ்வும் மலர்ந்திச்சு. அம்மாவை அழைச்சாந்தேன். ஆனா அவங்க போடுற விடுகதைக்கு விடை கிடைக்க மாட்டேங்குதே! என் மாமன் மகன் மாரியப்பனுக்கா நான் மாலையிட வேணும்?... ஊ ஹஅம். ஈசனே!... தாயே மாரியம்மா ..."

அமுத விலாசம் பங்களா அல்லோல கல்லோலப்பட்டது. முகம் பார்க்கும் கண்ணாடி சிதறியது. முகம் சேர்க்கும் மை சிந்தியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/20&oldid=1203567" இலிருந்து மீள்விக்கப்பட்டது