பக்கம்:அமுதவல்லி.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200

அமுதவல்லி


இறங்கியும் ஏறியும் விளையாடி-விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்த மார்பகத்தை நோக்கினாள்.

ஊடுருவிப் பரவிய எரிச்சலை மூடிக் கொண்டிருந்த ரவிக்கையின் இருபுறங்களின் கொட்டடிப் புள்ளிகள் எரிச்சலின் நோவு புரியும் படி சுட்டின. கசங்கிக் கிடந்த மேலத் தொங்கலில் கிழிசல் பொன் வண்டாக பளிச்சிட்டது.

பதறிப் போனாள் அவள்.பதட்டத்தின் துடிப்புடன் மாரகச் சேலையை இழுத்து விட்டாள். தாழ்ந்த விழிகளை ஏற்றினாள்.

அந்த இளசு முகத்தை நிமிர்த்த வில்லை!

செம்பவளம் கட்டிலை விட்டு இறங்கி ‘தட தட வென்று ஒடத் தலைப்பட்டாள். தண்டைகள் குலுங்கின; 'மிஞ்சி'கள் கெஞ்சின.

அவன் திடுக்கிட்டு நிமிர்ந்தபோது, அவள் வெளிப் புறத்துத் திட்டி வாசலை எட்டி விட்டதைக் கண்டான். இடுப்பில் செருகி வைத் திருந்த திருக்கை வால் தார்க்குச்சியை சோற்றுக் கையில் “லாவிப் பற்றியவனாக, அவன் தப்படி போட்டுத் தாவினான்.

மந்தாரம் கலைந்த அந்தி பாங்கு சேர்த்து, பரிவு கூட்டி, பண்பு பிணைந்து, அன்பு துாவி விளையாடிவிளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்த பொன் நிறைப் புனித வேளை அது!

 “எலே பொண்ணு! இந்தாலே ஒன்னைத்தான்!
கூவிக் கொண்டே ஓடினான். நிழல்கள் வளர்ந்து ஓடின.

கூப்பிடக் கூப்பிட பறிஞ்சிட்டியே சிட்டுக் குருவி யாட்டம்?” என்று கேட்டுக் கொண்டே வேலிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/202&oldid=1460006" இலிருந்து மீள்விக்கப்பட்டது