பக்கம்:அமுதவல்லி.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

203

பூவை எஸ்.ஆறுமுகம்


கும்பிடுற தாராடி சாமி சத்தியமான ஆணை இது: ம்!..." என்று வீறுகொண்டு முழங்கினான் அவன்.

சத்தியத்துக்குக் கட்டுப்பட்ட நல்ல பாம்பு கணக்கிலே செம்பவளம் அப்படியே-அங்கேயே நின்றுவிட்‌டாள்! ரத்தப் பசைமிகுந்த தளிர்மேனியில் கத்திபட்டதும் ரத்தம் பீறிடுமே, அப்படி அவள் நயனங்களிலிருந்து ரத்தம் கொப்பளித்துப் பீறிட்டது! ரத்தம்-ஆம்; ரத்தக் கண்ணிர் பொங்கி வழிந்தது.

அவள் முன்னே அவன் வந்து நின்றான்.

“நீ....நீங்க எதுக்கு என்னை இப்பிடிக்குச் சோதிக்கிறீங்க?’ என்று தேம்பினாள் செம்பவளம்,

அவன் நடுங்கினான். சோளக் கொண்டிையின் முனையை எட்டிப் பற்றி நெருடிக் கொண்டிருந்தன அவனுடைய முறுக்கேறிய விரல்கள். நானு ஒன்னைச் சோதிக்கலையே! நீ தானாக்கும் என்னைச் சோதிக்கிறே?’ என்று பதிலுக்குச் செப்பினான்.

நானு சோதிக்கிறேனா? பொய்! என்னையில்ல தெய்வம் சோதிச்சுப்பிடுச்சு சத்தமுந்தி!தெய்வம் இல்லே! யாரோ துப்புகெட்ட ஆம்பளை -யாரோ ஒரு ஈவிரக்கமத்த பாவி என்னைச் சோதிச்சுப்பிட்டான்! ஆட்டுக் குட்டியைக் குண்டுக்கட்டாக் கட்டி மடிக்கி அழுத்தி பதம் பார்த்துடானுங்க‌ ஒரு கொடுமைகாரன்!...அய்யையோ! எஞ்சாமியே!

அவள்‌ காட்டேறியாக பற்களைக் கடித்துத்துப்பினாள். விழிகள் ஏறிச் சிவந்தன. நெற்றித் திடலில் பச்சை நரம்புகள் புடைத்தன. செக்கச்சிவந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/205&oldid=1460008" இலிருந்து மீள்விக்கப்பட்டது