பக்கம்:அமுதவல்லி.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204

அமுதவல்லி



நாசியின் முனையில் ரத்தம் கட்டி விட்டது. சுடுநீர் சரம் தொடுத்தது தலையில் அடித்துக் கொண்டாள்; முடி இழைகளைப் பிய்த்துக் கொண்டாள். மறு தரமும் அழலானாள். தொண்டைக் குழி எரிந்தது,

அவன் கண்களைத் துடைத்துக் கொள்ளக்கூட நினைவிழந்து அவளையே ஆழ்ந்து நோக்கினான். “மெய்யாலுமா? அதாலே தான் நீ சாலை மரத்துக் கிளையிலே உருவு சுருக்குப் போட்டு அதிலே ஒங்கழுத்தை மாட்டிக்கிட்டு நாண்டுக் கிட இருந்தியா? நல்லவேளை, தாராடிச்சாமி எங்கண்ணுப் புறத்துக்கு ஒம்பிட்டு மூஞ்சியைக் காட்டிச்சு. கண்ணு முடி, கண்ணைத் தொறக்கிறதுக்குள்ளாற ஒன்னைக் காப்பாத்திப் போட்டேன்!” என்று சொல்லி, அவளை ஆதர்வாக நெருங்கினான். “ஒன்னை இப்படி ஏச்ச பாவியை இன்னிக்கு இல்லாங் காட்டியும் எப்பவானும் ஒரு கடுத்தம் எங்க குலதெய்வம் எங்கிட்டே கொண்டாந்து சிண்டுப் பிடியாய் நிறுத்தாமத் தப்பாது; அப்படியே கட்டாயம் செய்யும் தெய்வம், அப்படிச் செய்யலைன்னா அது தெய்வம் இல்லே! என்னை நம்பு: ஒன்னைக் கெடுத்த அந்தப் பாவியை அந்த ஈன மிருகத்தை-அந்தப் பாழத்த வெறியனை நானு இந்தத் தார்க்குச்சியாலவே கும்மாங் குத்தாக் குத்தி குத்துயிரும் குலை உயிருமா நதக்கி அடிச்சுப் போட்டுப்புட்டு, அவனை உங்காலிலே விளுந்து மாப்பு கேட்டுக்கிட வச்சுப்புடுறேன்!... அப்பாலே அவன் எங்கிட்டாலும் ஒரு மரத்து உச்சியிலே தான் மாண்டுக்கிட்டுக் கிடப்பான், மெய்யாலுமே ரோசம் உள்ள பொறப்பாய் அவன் இருந்தாக்க ஒரே ரத்தத்துக்குப் பொறந்தவனுக்கு மானமும் ரோசமும் தான் உசிரு!... வரட்டும்!...சரி... நீ வா!.. குடி சைக்குப் பறிஞ்சு உண்டனப் பேசலாம்!” என்று அவன் கெஞ்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/206&oldid=1378140" இலிருந்து மீள்விக்கப்பட்டது