பக்கம்:அமுதவல்லி.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 அமுத வல்லி

மேலு குளிக்கோணுமா? சொல்லு, நானு அங்கிட்டாலே ஒடிப்புடுறேன்!”

‘அது ஒண்ணு தான் கொறை ச்சல் எனக்கு! நீங்க சாப்பிடுங்க! நானு சொன்னாச் சொன்னதுதான்... நீங்க முந்திச் சாப்பிட்டாத்தான் நான் பிந்திச் சாப்பிட ஒப்புக்குவேன் !’

அவன் பேச்சு மூச்சுக் காட்டினால் தானே? வட்டில் நிறைந்து, காலி ஆனது. “ஆமா, இந்த ஊருக்குப் பேரு என்னவாம் ?

அதுவா!... சேந்தமங்கலம்னு பேரு!’ ‘இதுக்கும் எங்க நா குடிக்கும் எம்மாந்துாரம் இருக்கும்?’ - - *

“பன்னெண்டு கல்லுக்கு மிஞ்சித் தான் இருக்கும்!” “எங்க மச்சான் காரக ஊருக்கும் அதாங்க... அரசர் குளத்துக்கும் இதுக்கும்?”

“ஒண்ணு ரெண்டு பதிய இருக்கும். அம்புட்டுத்தான்!”

அவன் பதில் சொல்லிக் கொண்டே சாப்பிட்டான். ஏதுக் காம் கேக்குறே?” :

அவள் அகப்பைச் சாதத்தைக் கொட்டிவிட்டு, “என்னைக் காணாம இந்நேரம் அம்மான் ஆடு அமளி துமளிப்படும். இடு சாமச் சங்கதி எங்க ஆத்தாக் காரிக்கும் விழுந்திருக்கும். இடுக்கிப் பூச்சியா துடித்திருப்பா என்னைப் பெத்த புண்ணியவதி என்று தழு தழுக்கச் சொன்னாள்.

“நெசந்தான் செம்பவளம் என்று எழுந்தான். “தண்ணிச் சோறு?, என்று இடிை மறித்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/220&oldid=1378327" இலிருந்து மீள்விக்கப்பட்டது