பக்கம்:அமுதவல்லி.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறு முகம்

ரேக்ளாவிலே கொண்டு போய்ச் சேர்ப்பிக்கிறேன்...! ஆனா, ஒன்னை ஒண்டியா மட்டும் விட்டுப்புட ஏலாது!’

அவள் கண்ணிர் பெருக்கினாள். எம்பேரிலே உசிரையே வைச்சிருக்கிற எம்புட்டு ஆசை மச்சானை நானு இனிமே எந்த மூஞ்சியோட போய்க்கண்டு தண் டு வேனுங்க?... அவங்க அன்பை, நேசத்தை : பாசத்தை வஞ்சிக்க நானு துணிஞ்சேன் னா, அப்பாலே எனக்கு ஏழேமு பொறப்புக்கும் கடைத் தேறவே வழி கெடைக்காதுங்க! ஆனா, எனக்கு நேர்ந்திட்ட இடு சாமத் தீவினையை அவுக கேட்டாக்க, அப்பவே என்னை தழையைச் சீவுறதொப்ப சீவி காவு வீசிப்புடுவாருங்க! என்னைப் பெத்த ஆத்தா இந்தச் சேதியைக் கேட்டா, அப்பவே நெஞ்சடைச்சு சிவலோகம் போயிடுவாங்க! இப்ப சொல்லுங்க எனக்கு ஒரு வழி... ம்... சொல்லிடுங்க! ஒத்தை தடமானாலும், ஒசந்த தடம் இனி எனக்கு இருக்கு துங்களா, செத்து மடி பிறத்தைத் தவிர்த்து? வாயைத் தொறந்து கேக்குறேனுங்களே, வாயைத் தொறக்க மாட்டீங்களா?...”

அவள் வீறுடன் வினவியவளாக, அலைபாய்ந்து நின்ற காளியப் பனை உலுக்கி விட்டாள்.

“சொல்லட்டுமா?”

“சொன்னா, கோபிச்சுக்க மாட்டீயே?”

“ஊஹ அம்!”

“எஞ்சொல்லுக்கு மதிப்பு தருவியா?”

‘ம்! கதுப்புக் கன்னங்கள் குழிந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/223&oldid=1378343" இலிருந்து மீள்விக்கப்பட்டது