பக்கம்:அமுதவல்லி.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம்

சீதேவிப் பொண்ணு நீ எனக்குப் புதையலாட்டம் கெ டச்சிருக்கிறே!’ என்று மெய் மறந்து பேசினான் அவன். கண் ணீர் துலங்கியது:

அவளுடைய கண்ணிரை அவன் துடைத்து விட்டான், கை விரல்கள் நடுங்கி, அடங்கின. சரி, இப்பவாச்சும் சாப்பிடு, செம்பவளம்!”

அவள் மோனம் நிறைந்த நாணம் தூவினாள் எஞ்சோறை இனி நானு சாப்பிடாம இருப்பேனா ?”

அவன் சிரித்தான். அவள் குந்தி னாள் . அவன் இலையை நகர்த்தினான்.

அவளோ எச்சில் வட்டியை தன் திசைக்கு வசமாக்கினன்.

மோதிரக்கை பரிமார, வளைக் கரங்கள் கவளங்களை உருட் டின.

“ஒரு சங்க திங்க... நானு இங் காலே இருக்கிற துப்பு ஒரு ஈ காக்காவுக்குத் தெரியப்புடாது.”

“அது எனக்குப் புரியாதா, புள்ளே? விடியறதுக்குள்ளே நாம மேலச் சீமைக்குப் பறிஞ்சிடுவோம்!”

அவள் நளினக் கவர்ச்சியுடன் நகை சிந்தினாள். ‘நானு இந்த வட்டைக்கு ராசா பல்லு மேலே

பல்லுப் போட்டு ஒரு பய என்னை ஏதும் கேட்கவே மாட்டான்!”

அவள் மறுபடி சிரித்தாள். அவளுக்குக் கை கழுவ நீர் கொடுத்தான், அவன்!

அவனுக்கு இதழ் சிவக்க தாம் பூலம் கொடுத்தாள், அவள் ! -

பிறை வெட்கம் வந்து தொலைந்த து:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/225&oldid=1378357" இலிருந்து மீள்விக்கப்பட்டது