பக்கம்:அமுதவல்லி.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் 21

இங்குமாக நடந்தான். பலத்த யோசனை. பொடிதுவினால், சிந்தனை வேலை செய்யும் என்பது அல்ல! நடைபயின்றாலும் சரி, மண்டை உச்சிவழுக்கையைத் தடவி கொடுத்தாலும் சரி, அவன் சுறு: சுறுப்புப் பெறுவான். இதுவே மாமூல் வழக்கம். "நேத்து விபத்து நடந்ததாக நான் பதட்டத்தில் உளறி விட்டிருக்கிறேனே ?. ஒருவேளை, இதேமாதிரி தான் மற்றவங்களுக்கும் சொல்லித் தொலைச்சிருப்பேனோ?... நேத்து நடந்ததுக்கு சாவதானமாக இன்னைக்கு போன் செஞ்சிருக்கிறாங்களே, இது 'டூப்' சேதியோ...அப்படின்னு சந்தேகப்பட்டாலும் பட்டிருப்பாங்க!’ என்று மனத்திற்குள்ளாகவே ஒரு 'கோர்ட்' நியமித்து, வாதப்பிரதிவாதங்களை சண்ட மாருதமாக விளாசிக் கட்டினான். அதற்குப் பிறகு ஒவ்வொரு வீட்டுக்கும் எண்களைத் திருப்பி, செய்தியை நாசூக்காக நினைவூட்டுவதே சரி என்றும் உணர்ந்தான்.

ஒளி வெள்ளம் மெருகு ஏந்திப் பொலிவு காட்டியது. மண்ணின் தவம் விண்ணில் பலித்திருப்பதை போன்று, அழகின் சோபிதம் அற்புதக் கனவுலகமாகத் தொங்கிக் கொண்டிருந்தது ஒவ்வொரு உடுவும் ஒவ்வொரு கனவேதான்.

செய்தி வரப்பெற்றிருந்தவர்கள் கும்பல் கூடினர், தட்டில் கொணர்ந்த குளிர் பானங்களைக் குடித்தனர். பிறகு, சொல்லிக் கொடுத்த மாதிரி அவரவர்கள் பதட்டம் காட்டினர்; பதறிப் பதறிப் பேசினார்கள். படமும் பணமும் மட்டுமின்றி, தத்தம் எதிர் காலமும் சேர்ந்து அந்தரத்தில் ஊசலாடும் உள்நோக்கம் அவர்களுக்குத்தானே தெரியமுடியும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/23&oldid=1214842" இலிருந்து மீள்விக்கப்பட்டது