பக்கம்:அமுதவல்லி.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22 அமுதவல்வி

சோமலிங்கம் சுற்றிச் சுற்றி வந்தான். கதாநாயகன் இந்திரஜித்தை மட்டும் கானோம்; உள்ளே ஒடிப்போய், ஒரு சாவியை எடுத்தான். 'காத்ரெஜ்” வழி திறந்தது. டைரி ஒன்று உரு காட்டிற்று. அது நட்சத்திரம் அமுதவல்லிக்குச் சொந்தம். மேலட்டையுடன் பொன் எழுத்துக்கள் சொந்தம் கொண்டாடிய வருஷத்தைப் பார்த்தான். கதாநாயகன் இந்திரஜித்துடன் அமுதவல்லி கதாநாயகி வேடம் ஏற்று நடிக்க ஒப்பந்தமான வருஷத்தை நினைவு செய்து ஒப்பிட்டுப் பார்த்தான்.

ஒரு குறிப்பு :

"...இன்றைக்குத்தான் முதன் முதலிலே இந்திரஜித் அவர்களோடு நடித்தேன் . பண்பாகப் பேசுகிறார்: பவ்யமாக நடந்து கொள்கிறார், என்னை மாதிரியே அவரும் கீழ்ப்படிப்பிலிருந்து முன்னுக்கு வந்திருப்பவர்தான். ஷூட்டிங் முடிந்த கையோடு என்னுடன் வந்த அவர் என் வீட்டிலேயே இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு உடனே புறப்பட்டுப் போனார். அம்மாவுக்கும் இவர் குணம் பிடித்தமே!"

"...நாட்கள் எப்படியெல்லாம் ஓடிவிடுகின்றன. "மஞ்சளும் மருக்கொழுந்தும் படப்பிடிப்பு ஆரம்பமான சுவடே தெரியவில்லை. அதற்குள் படம் முடியும் கட்டத்தில் இருக்கிறது. ஆமாம் எங்களுடைய காதல் ஒப்பந்தமும் இதே சீராகத் தான் பக்குவம் கண்டுள்ளது. மணந்தால் இந்திரஜித்தைத்தான் மணப்பேன் என்ற என்னுடைய மன வைராக்கியத்தை அவர் ரொம்ப தூரம் பாராட்டினார்!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/24&oldid=1214845" இலிருந்து மீள்விக்கப்பட்டது