பக்கம்:அமுதவல்லி.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் 23

"...படத்தின் வெளியீட்டு விழாவன்று, எனது துடிப்பை நான் புகழ்ந்தேன். பரஸ்பரம் முக நைப்புக்காகப் பரிமாறப்படக் கூடியவையல்ல இவைகள்! ஏனென்றால், அவரைப்பற்றி நானும், என் விஷ்யத்தில் அவரும் இனிமேல் கவலை கொள்ள வேண்டியவர்களாக ஆகப் போகிறோம். திருப்பதிக்கு ஒரு வாட்டி போய் வேங்கடாசலப் பெருமாளைத் தொழுது திரும்புவதாகவும் திட்டம் தீட்டித்தந்திருக்கிறார். என் கழுத்திலே மாங்கல்யம் ஏறப்போகும் நடப்பானது ஊர்ஜிதம் ஆன கையோடுதான், இதை மற்றவர்களுக்குச் சொல்ல வேணும்!.

அப்போது, காலடிச்சத்தம் பிடறியைப் பிடித்து உலுக்கவே, வேறு வகையின்றி, டைரியை வைத்துப் பூட்டிவிட்டுத் திரும்பினான் சோமலிங்கம். மேனே சரு ஐயாரு!..." என்ற தடிமனான அழுத்தக் குரல், நல்ல வேளையாக அவனை அழுத்தி விடவில்லை. அந்தமாகக் கூப்பிட்டவள் அமுதவல்லியின் தாயார் கண் பழுது, 'என்னாச்சிங்க? எம்மவளைப்பத்தி யாதானும் தாக்கல் காதுக்கு எட்டுச்சிங்களா?" என்று கேட்டதுதான் தாமதம், அவளால் துக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. செருமிச் செருமி அழுதாள் கிழவி, பாசத்தின் சரித்திரம் விரிவு பெற்றதாயிற்றே?

வந்தவர்கள் விடை’ பெற்றுப் போக வந்தார்கள். கிழவியைப் பார்த்து அவர்களின் முகங்கள் சுருங்கின. வயதும் ஆகிவிட்டதல்லவா?

வாசலில் நாய் காவல் இருந்தது.

முகப்பில் கூர்க்கா நின்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/25&oldid=1214846" இலிருந்து மீள்விக்கப்பட்டது