பக்கம்:அமுதவல்லி.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26 அமுத வல்லி

வர வளையம்மா! நீ இன்னா, அதுக் குக் கொள்ளை உசிராச்சே?" என்று அன்னை உரைத்த சொற்கள், வார்த்தை வார்த்தையாகப் பிரிந்து, பின்னி ஒலித்துத் தேய்ந்து விலகின.

மாரியப்பனை அவள் நினைவு கூட்டினாள். மாரியப்பனின் நினைவு முகத்தைச் சிந்தையில் கூட்டினாள். பாசமும் நேசமும் உரை கல்லாக அமைந்து, காதலும் கனவும் 'மாற்று' உரைத்துச் செப்பிய வாய் மொழிகளை-அந்த வாய்மொழிகளின் நடைபாதையில் ஊர்ந்து வழி காட்டிய நடப்புக்களை-அந்த நடப்புக்களின் உள்ளடக்கமாக வாய்த்த உள்ளப் பாங்கின் முத்துச் சிதறல் ஒளிக்கற்றைகளை அவள் மறந்துவிட்டாளா?

பூர்வாசிரமத்தில், அமுதவல்லிக்குக் 'காத்தாயி' என்று நாமகரணம் சூட்டியிருந்தாள். அவளைச் சுமந்தவள். காத்தாயியின் வரவு-செலவுப் பேரேட் இப்புத்தகத்தில், தந்தையின் உயிர் செலவினத்தில் பதியப்பட்டவுடன், வரவு கலத்தில் நிதானமாக நிற்கப் பழகியிருந்த தாய்க்காரியின் பொறுப்பும் பெறுமதியும், மூசா தங்கத்தின் ஏறுமுக விலைப் பருவத்தைப் போல விளங்கலாயின. குஞ்சை அல கால் கோதி, அரவணைக்கின்ற தாய்ப்பறவையாகக் கிழவி மாறினாள். சுங்கடிச் சேலையின் முந்தானை கொண்டு, காத்தாயியின் அழகைத் திருஷ்டி படாமல் காத்து வந்த பக்குவம் அவளுக்கே சொந்தம். பக்குவம் அடைந்தது காட்டுப் பூ பூ என்றால், என்ன வென்று பெயரிடுவது? மல்லிகையா? முல்லையா? செவ்வந்தியா?-இந்தப் பெயர்களா பொருத்தப்படும்? ரோஜா என்றால் தான், உவமைக்குக் கோபம் வராது. தெய்வத்தச்சன் செதுக்கிய சுவர்ண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/28&oldid=1228792" இலிருந்து மீள்விக்கப்பட்டது