பக்கம்:அமுதவல்லி.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் 31

பாற்றி வந்திருக்கும் என் மானமும் பறிபோயிருக்குமே? தாய் சொன்னாளே, அந்த அமுத வாக்கை அன்றைக்கே நான் படித்து உணராமல் போனேனே? பேதை நான்!. பாவி நான் ...!”

பொய்த் தாடியும் மீசையும் “டோபா” முடியுடன் தரையில் சிதறிக் கிடந்தன!

தழுவாத துருவங்கள்!

அகத்தின் அழகு, அல்லது கொடுமை முகத்தில் தெரியும் என்கிறார்கள் பெரியவர்கள். சிலருக்கு இம்மூதுரை பொருந்தும். ஆனால் அவர்களுடைய அமுத வாக்கிலும் நஞ்சைத் தோய்த்து மூடி, அந்த நஞ்சை அமிர்தமாக்கி அமைத்துப் பேசி நடிக்கும் மனிதர்கள் உலகத்தில் எத்தனையோ பேர்கள் இருக்கிறார்களல்லவா? நல்லவர்களுக்கும், நல்லவர்களாக நடிக்கும் கெட்டவர்களுக்கும் ஊடாகத்தான் உலகம் சுற்றுகிறது; சுழலுகிறது. இப்படிப்பட்ட நியதிக் கோட்பாட்டில்தான், புனைவடிவம் என்னும் பொய்க் கூத்தும் மேடையேறிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

ஆம் ; இதுதான் வாழ்வெனும் நாடகம்-வாழ்வின் நாடகம்!

அமுதவல்லிக்குத் தன் கண்களை நம்பத் தெம்பு வந்தது. தரைப் புழுதியில் சிந்திச் சிதறிக் கிடந்த மாற்றுருவச் சாதனப் பொருள்களையே இமை மூடாமல் பார்த்தாள். பார்த்த கண்கள் பூத்தன. ஆபத்துக்கு உதவ தெய்வமாய் வந்துதித்த மனிதருக்கு நூறு ரூபாய் கொடுக்கும்படி சொன்ன விஷயத்தை நினைவூட்டிக் கொண்டு, அந்த நின்னைவின் உருவத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/33&oldid=1230677" இலிருந்து மீள்விக்கப்பட்டது