பக்கம்:அமுதவல்லி.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம்

தட்டினால், திறக்கவேண்டும்!- இது விதி.

கையிலிருந்த செய்தித்தாளை வீசிவிட்டு நடந்து சென்று கதவைத் திறந்தான் சுப்பையா. காலையில செல்லையா கடையில் சாயா குடித்த போது குதிகாலுக்கு எத்துணை வல்லமை இருந்தது! தஞ்சாவூர் லெட்டர் இன்றைக்கேனும் வருமா?

வாசவில் தபால்காரன் நிற்கவில்லை.

அமுதா நின்றாள். கையில் பை, பையில் கொட்டாங்கச்சிகள், ஒழுங்கை மணல், ஒட்டை ரெயில்

“அப்பா, பிஸ்கட் தா!” என்று செல்லமாகச் சிணுங்கினாள்

அவன் நோக்கு தெருவுக்கு ஒடிய தருணத்தில், ராட்டை நூற்றுக் கொண்டிருந்த பெண்டுகள் காட்சி வளித்தார்கள். மீனாட்சியும் நூற்பாள். வாரம் எட்டு ரூபாய் கிட்டும். அந்த வருவாயும் தான் இந்த நாலைந்து மாதங்களாகப் போய்விட்டதே? மகளைப் பார்த்தார். கையை ஆவல் துள்ள நீட்டிய குழந்தையை ஆதரவுடன் தூக்கிக்கொண்டு, “வாம்மா, பிஸ் கட் தாரேன்! என்று சொல்லிக் கொண்டே சற்று வாசல் வெளியில் நின்றுவிட்டு, பிறகு, என்னவெல்லாமோ சிந்தித்தவனாக உள்ளே அடியெடுத்து வைத்தான்.

அமுதா படுசுட்டி இறங்கிக் கொண்டாள். பிஸ்கட் பாட்டுப் பாடலானாள்:

சுப்பையாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. இருப்பு கொள்ளாமல் வழிந்த காலமும் ஒன்று இருக்கத்தான் இருந்தது. காலம் மலையேறி விடலாம்; ஆனால் அந்தக் காலத்தின் சரிதத்திலே முத்திரை பதிந்த நிகழ்வுகள் மலைமேலிட்ட தீபங்களாகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/49&oldid=1375418" இலிருந்து மீள்விக்கப்பட்டது