பக்கம்:அமுதவல்லி.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60 அமுதவல்லி __________________________________

மிருந்த காசு பணமும் விதிச் சுழலுக்குச் சமர்ப்பண மாகிவிட நேர்ந்தது. பிறந்த மண்ணில் ஒய்வு கொள்ள வேண்டுமென்பது டாக்டரின் கட்டளை!

  எதை மறப்பான்? எதை மறக்காமல் இருப்பான்?
  இந்த லட்சணத்தில் வாழ்க்கை எப்படி விளையாட்டு ஆக முடியுமாம்? பொய்! வாழ்க்கை ஒரு தண்டனை!...ம்...!
  "அப்பா, ரொட்டி!" என்று நாதம் கூட்டினாள் சுட்டிப் பெண். இடது தோள் பட்டையில் இருந்த கிழிசலை நாசூக்காக மறைத்துக் கொண்டாள்.
   சுப்பையா இடுக்கியில் சிக்குண்ட கூண்டுப் புழு வெனத் துவண்டான். “இந்தா தாரேன் அம்மா!", என்று உருக்கமாகச் சொல்லிக் கொண்டே உள்ளே வந்து, ஆஸ்டர் மில்க் டப்பாக்களைத் திறந்து திறந்து மூடினான். ஒன்றிலேனும் சாஸ்திரத்திற்காவது ஒரு ரொட்டி, ஒரேயொரு ரொட்டி தரிசனம் கொடுக் காதா, தெய்வமே!
   இத்தனை நாட்களிலே இப் படிப்பட்ட பயங்கரச் சோதனை ஒரு நாளில் கூட சம்பவித்ததில்லையே? வீட்டில் எஞ்சிக்கிடந்த வெள்ளிச் சாமான், வளைகள், ட்ரான் விஸ்டர், கடிகாரம் என்று எல்லாவற்றையும் புதுக்கோட்டையில் ரகசியமாக விற்றுப் பணம் பண்ணி, குடும்பத்தை ஒட்டிய கதையை அவர் களது வீட்டின் நான்கு சுவர்கள் கூட அறிந்திருக்க முடியாதே?
   பழைய பல்லவியையே பாடி வீரிட்டது குழந்தை.
   காலையில் தேநீர் அருந்தி விட்டு அருகிருந்த பெட்டிக் கடையில் பிஸ்கட் வாங்க காசைத் தேடினான். அவன். பை காலியாக இருந்தது. முன்பே
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/52&oldid=1378236" இலிருந்து மீள்விக்கப்பட்டது