பக்கம்:அமுதவல்லி.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56 அமுதவல்லி


  "நல்ல காலம்!”
  “யாருக்கு?”
  "பாகிஸ்தானுக்கு!"
   அந்தத் தலைவர் லண்டனுக்குப் போய்ச் சேர்ந்த விவரம் பற்றிப் பேச எண்ணமிட்ட சுப்பையா தனக்கு வந்த தஞ்சாவூர்க் கடிதம் பற்றிய நினைவு. பெற்று உடனே அந்த நல்ல சேதியை உரியவளிடம் முதலில் உரைத்தான்.
   மீனாட்சி ஆனந்தக் கண்ணீர் சொரிந்தாள், சுற்றி வந்த வெள்ளைப் பூனை ஒன்றும் புரியாமல் விழித்ததை அவள் உணர்ந்தாள். பாவம், எங்களோடு சேர்ந்து இந்த வாயில்லா ஜீவனும் கஷ்டப்படுது.
   "காலம்பற எப்படியாவது தோது பண்ணிக் கிட்டு தஞ்சாவூர் புறப்பட்டா கணும், மீனாட்சி!" என்றான் சுப்பையா.
   அவள் இதழ்கள் துடிக்க, தலையை இணக்கமாக ஆட்டினாள். "நீங்க இப்படிச் சொல்றப்போ நான் என்ன சொல்வேனுங்க? அத்தான், சுவரை வச் சிட்டுத் தான் சித்திரம் வரையனும் நீங்கதான் எங்களுக்கெல்லாம் அச்சாணி. ஆகச்சே தஞ்சாவூர் போனடியும் பழைய டாக்டர் கோபால் இட்டே 'சோதனை' பண்ணிக்கிட்டு மருந்து சாப்பிடுங்க, இனியாச்சும் ஹார்லிக்ஸ் வாங்கிக் கலக்கி, சாப் பிடுங்க!... என்றாள். அவளால் தொடர்ந்து பேச இயலவில்லை.
   "ஓ!"... அவன் புறப்பட ஆயத்தப்பட்டான்,  பையும் கையுமாக உள்ளங்கையிலே இருந்த அந்த ஒரு
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/58&oldid=1376173" இலிருந்து மீள்விக்கப்பட்டது